பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/415

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# டோக்கியோ1,2.6.85 - 401 லாம் தனி மதிப்பினைப் பெற்றேன். என்றாலும் இவர்கள் என்னிடம் காட்டிய மதிப்பு உயர்ந்தது. என்னை அவர்கள் முன் (counter)"நிற்க விடவில்லை. அருகில் ஓரிடம் காட்டி, அதில் என்னை உட்கார வைத்து, வேண்டியவற்றையெல் லாம் அவ்வப்போது என்னிடம் வந்து கேட்டுச் சென்றனர். எனக்கெனப் பயணச் சீட்டில் குறிப்பிட்ட வகுப்பில் இடமில்லை என்றும் அடுத்த கீழ் வகுப்பில் பயணம் செய்ய லாம் என்றும் (எனக்கு 2 மாதங்களுக்கு முன் பதிவு செய்யப் பெற்றதாயினும் அண்மையில் அதுபற்றி உறுதி செய்து கொள்ள வேண்டுமாம்) அதற்கென அமைந்த வித்தியாசத் தொகையை நான் சென்னை சென்ற பின் எனக்குச் சிட்டுத் தந்த ஸ்விஸ் விமானத்தாரிடம் பெற்றுக் கொள்ளலா மென்றும் கூறி, அதற்கெனச் சான்றிதழும் தந்தனர். மற்றும் மேல்வகுப்பிற்குரிய எல்லாச் சலுகைகளும் தந்தனர். பின்னும் அங்கேயே இருக்க வைத்து பயணத்திற் குரிய எல்லாச்சீட்டுகளையும் கொண்டு வந்து தந்து மரக்கறி உணவு முதலியவற்றிற்கும் ஏற்பாடு செய்து என்ன்ை உடன் அழைத்துச் சென்று, நல்ல இடத்தில் இருக்க வைத்து, விமானத்திற்குச் செல்லும் வழியினையும் உணவு முதலியன கொள்ளும் இடத்தினையும் காட்டி, என் பயணம் சிறக்க என வாழ்த்தியும் சென்றனர். விமானத்தில் வகுப்பு மாறினாலும் இருக்க நல்ல வசதியான இடத்தினையும் ஒதுக்கித் தந்தனர். நான் அவர்கள் வழியே ஜப்பானிய மக்களின் பண்பாட்டையும் அந் நாட்டின் நலத்தினையும் அங்கே செல்லு முன்பே உணர்ந்து தொண்டேன். 10.30க்கு விமானத்துள் நுழைந்தேன். விமானம் பெரியது; நான் முன் பம்பாயிலிருந்தும், ஸ்விஸ் நாட்டி லிருந்தும் வந்த பெரு விமானத்தை ஒத்தது. 500 பேர் அமரக்கூடியது: மூன்று வகுப்புகள் இருந்தன. அனைவரும் எப்போதும் போன்று சுறுசுறுப்புடனும் பயணிகளிடம் அன்புடனும் பழகினர். 10.50க்குப் புறப்பட்ட விமானம் 7 : மணி நேரம் பயணத்துக்குப்பின் - டோக்கியோ ஏ.-26