பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/425

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 4.6-85 "எங்கும் ஜப்பான் எதிலும் ஜப்பான்' என்பதைக் கண்டேன். பெரிய தொழிலகங்கள், அலுவலகங்கள், அரசியல் நிலையங்கள். இரெயில் நிலையங்கள் எங்கும் ஜப்பான் மொழியே. தெருப்பெயர், வண்டிகள் செல்லும் நெறி, விடுதி யாவும் அம் மொழியிலேயே. பேசுபவர் அம் மொழியிலேயே. ஒரு சிலரே ஆங்கிலம் அறிந்தவர். எனவே இங்கே புழங்குவது இதுவரை இருந்தது போன்று இல்லை: சற்றே கடினமே. அரசாங்க அலுவலகமே இப்படி இயங்கின் என் செய இயலும்? இந்நாட்டுக்கு அரசியாக ஆட்சிபுரிந்தவர் இன்று ஒய்வு ஊதியம் பெற்று, புதிய அரசியல் சட்டத்தின் கீழ் அதிகாரம் அற்றவராக உள்ளார். எனினும் அவருக்கு வேண்டிய சலுகைகள் அனைத்தும் தரப்பெறுகின்றன. நாட்டின் கோடியில் உதயசூரியன் காட்சி அளிக்கிறான். உண்மையிலே இந்நாட்டிலிருந்துதான் நாளே உதய மாகின்றது: பிறகுதான் பிற நாடுகளில். இதன் நிலையினை நான் அன்று வரும்போது கண்டேன். இவற்றை எல்லாம் எண்ணிக்கொண்டே உறங்கிய நான் விடியலில் கண் விழித்துக் கடன்களை முடித்துக்கொண்டேன். 7.30க்குச் சிற்றுண்டி கொண்டேன். சிற்றுண்டி உண்ணும்போது, சென்னையிலிருந்து (மயிலை) டாக்டர் கணபதி என்பவர் (நேற்று இரவு வந்தவர்) அறிமுகமானார். அவரும் நகர் காண நான் பதிவு செய்த அதே பஸ் சில் பதிவு செய்திருந் தார். எனவே இருவரும் ஒட்டல் பாலஸ் சென்றோம். அங்கே என்னைக் காபா மடத்தில் சந்தித்த திரு. சாமி