பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/427

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

டோக்கியோ 4-6-36 413 துள்ளன என்றும் விரைவில் எரிமலை குமறிக் கக்கும் காலம் வரப் போகிற தென்றும் அதற்குரிய முன்குறிப்புக்கள் தோன்றி விட்டன என்றும் கூறினார். ஏனோ இதைச் சொன்னார் என்பது புரியவில்லை. மேலும் நாட்டில் 400 விமானங்கள் உள்ளதென்றும் கூறினார். சிவ, நாக, கந்தா போன்ற பெயர்களில் சாலைகளும் பகுதிகளும் உள்ளமை யின் ஒரு காலத்தில் இந்நாடு நம் நாட்டொடு மொழியாலும் பிற வகையாலும் தொடர்பு கொண்டிருந்தது உண்மையோ என்னுமாறு இருந்தது. 1867ல் உள்நாட்டுப் போர் வந்த தாகவும், பிறகே நாட்டுப் பொருளாதாரம் கடந்த ஒரு நூற்றாண்டில் நன்கு வளர்ந்ததாகவும் கூறினார். இந்நாட்டின் அரசியாகவும் அரசராகவும் இருந்த வரும் ப்ோருக்குப் பின் முழு ஒய்வு பெற்று, அரசியல் தலைமையை விட்ட பின்பு அவர்கள் வாழப் பெரிய இடம் சுமார் 400 ஏக்கர் நிலத்தில், கட்டிடங்கள் பல உட்பட தரப் பெற்று அதில் சிறக்க வாழ்கின்றனராம். வாயில்களில் தக்க காவலர் நின்றனர்.உள்ளே செல்ல இசைவு பெற வேண்டும். எனவே வெளியே இருந்து கண்டோம். ஆழ்ந்த அகழி, சுற்றிய மதில், அதற்குள் சோலை உள்ளே அரண்மன்ை என்ற அதன் தோற்றம் பழங்காலத் தமிழக அரசர் மாளிகையை நினைவூட்டிற்று. வாயிலும் பழங்காலக் கோட்டை வாயிலாகவே இருந்தது. . - இந்நாட்டில் சப்பானிய மொழியன்றிப் பிற மொழி களைக் காண இயலாது எனக் குறித்தேன். எங்கோ ஓரிரு இடங்களில் ஆங்கிலம் இருப்பினும் இவை அமெரிக்க உச்சரிப்பைக் கொண்டுள்ளன (உதாரணம் நகரம் - Citi) ஆயினும் போக்குவரத்து அனைத்தும் நம் நாடுகளைப் போன்றே உள்ளது. பெருங் கடைத் தெருக்களும் பெரு வங்கிகள் நிறைந்த கடைத் தெருக்களும் கடந்தோம். இசை, நாடகம், நாட்டியம், ஆகிய கலை வளர்க்கும் பெருங்கூடம் ஒன்றும் கண்டோம். அப்படியே சுமார் 75, 000 பேர் தங்கிக் காணக் கூடிய ஒரு விளையாட்டரங்கமும் கண்டோம்.