பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/45

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாரிஸ்-ஜினிவா 5-4-85 35 நான் வரும் நேரத்தின்னயும் நாளையும் விமானத்தையும். குறித்துப் பாரிசில் அறுவருக்கு எழுதின்ேன். எனினும் ஒரு வரும் வரவில்லை. இருட்டத் தொடங்கிவிட்டது. அந்த அன்னையார் உதவி இல்லாதிருந்தால் இன்னும் காலம் தாழ்ந்திருக்கும். எனக்கே சுவிஸ்சு விமானத்தார் ஒரு விடுதியினைப் பதிவுச் செய்திருந்தனர். எனினும் அது நாளையே (6.4-85) எனக்குக் கிடைக்கும். என் முதற் பயணத் திட்டப்படி நான் 6-4-85-ல் பாரிஸ் செல்ல இருந் தமையே காரணம். எனினும் திருமதி காந்திமதி அவர்கள் சொல்லிய ஓரியன்டு விடுதிக்கு வாடகை வண்டியைச் செலுத்தச் சொன்னேன். அந்த இடம் அவனுக்குப் புரிய வில்லையாயினும், அங்கிருந்த காவலன் விளக்கிச் சொல்லவே புறப்பட்டர்ன். வழிநெடுக நல்ல மழை: நெடுந்துரம்அப்போது நான் நகருக்கு வெகு தொலைவில் விமான நிலையம் அமைத்துள்ளார்கள் என அறிந்தேன். (ஊருக்கு அருகிலேயே மற்றொரு விமான நிலையம் . பம்பாயைப் போல் உள்ளதெனவும் - அது உள்ளுர் பயணங்களுக்குப் பயன்படுவதெனவும் கூறினர்) பெருமழை - நெடுந்துாரம் - வழிநெடுக வளைந்தோடும் கார்கள். விளக்கொளி. வரை. குடைந்தாற்போன்ற அகன்ற உள் பாதைகள் - அவை பாலங்களோ - இ ய ற் கை யோ அறியக்கூடவில்லை. இருட்டும் வாகன விரைவும் தெளிவைத் தரவில்லை. இரவு 9-15க்கு நான், குறித்த விடுதியை அடைந்தேன். அவர் களுக்கு நான் எழுதிய கடிதம் இன்று காலைதான் கிடைத் தது போலும். ஈஸ்டர் விடுமுறையின் கூட்டமிகுதியாலும் கடிதம் காலந்தாழ்த்து கிடைத்தமையாலும் இந்த விடுதிக்கு உரிமையான வயதான மூதாட்டியார் இடம் கிடையாது என்று வன்மையாகக் கூறிவிட்டார். நான் புதியவனாகை யாலும் வேறு எங்கும் செல்ல முடியா நிலையினையும் விளக் கினேன். அவர்களுக்கும் அவர் பணியாளர்களுக்கும் ஆங்கிலம் புரியவில்லை. நல்லவேளை "ஆம்ஸ்டர்டாமி" (Amsterdam) லிருந்து வந்து தங்கியிருந்த ஒருவர் வந்தார்: நல்ல ஆங்கிலம் பேசினார். அவர் என் நிலையினை அவர்க