பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/471

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிங்கப்பூர் 11.6.85 457 வந்திருந்த மக்களைப்பற்றி எண்ணினேன். எல்லோரும் தமிழகத்தினர். சிலர் வடவர் . சிலர் பிறர். பெரும் பாலோர் ஆண்கள், வேட்டி உடுத்தி இருந்தனர். காற் சட்டை இட்டவரும் சிலர். பெண்கள் பல வகையில் காட்சி தந்தனர். வடவரைப் போன்று சிலர் - வெள்ளையரைப் போன்று சிலர். இப்படிப் பலவகை உடை இருப்பினும் காதில் கம்மலும் தொங்கட்டமும் மூக்குத்தியும் - சிலர் காதில் சிமிக்கி போன்ற பிறவும் இருந்ததோடு முகத்தில் பொட்டும் இட்டுத் தம்மை இந்து சமயத்தவர் எனக்காட்டிக் கொண்டனர். அனைவரும் வீழ்ந்து வணங்கி அன்புடன் போற்றினர். அவர்தம் உடைமாற்றம் உள்ளத்தில் இல்லை என்பதை வழிபாடாற்றும் வகையில் கண்டேன். எப்படியோ இங்கு இந்த வகையில் இறையுணர்வு சிறக்க உள்ளதை எண்ணி எண்ணி மகிழ்ந்தேன். இறைவனை மறுமுறையும் வணங்கி விடைபெற்றுப் புறப்பட்டேன். கோயில் அருள் உணவு பெற்றதால் வீட்டில் உணவு கொள்ளவில்லை. சென்ற காலத்தின் அருமையும் இனி வருங்காலத்தின் பழுதிலாச் சிறப்பும், எண்ணியவாறு படுக்கச் சென்றேன். வாழி!