பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/472

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சென்னை 12.6.85 இன்று காலை சிங்கப்பூரில் எழுந்து கடன்களை முடித்துக்கொண்டு, இந்த நாட்குறிப்பினை (நேற்றையது) எழுதிக்கொண்டிருந்தபோது, சிரம்பான் இலட்சுமணன் செட்டியார் தொலைபேசியில் கூப்பிட்டார். அவர் என் பயண நிறைவு பற்றிக் கேட்டு மகிழ்ந்தார். அவர் அன்பினை எண்ணி மகிழ்ந்தேன். ஊர் சென்றதும் கடிதம் எழுதுவதாகக் கூறினேன். மாலை 6 மணிக்கு விமானமாயினும் 3மணிக்கே அங்கே சென்று சாமான்களை ஒப்படைக்க வேண்டும் என்றனர். அதற்கேற்ற ஏற்பாடுகளைச் செய்து முடித்தேன். திரு மாணிக்கச் செட்டியார் அவர்கள் அலுவல் மேற்சென்றார். இன்று மற்றொரு செட்டியார் திரு. நடராசன் அவர்கள் தம் வீட்டிற்கு விருந்துக்கு அனைவரையும் அழைத்திருந்தார். நேற்று மாலை அவர் குடும்பத்துடன் எங்களோடு கோயில் வந்திருந்தார். அப்போது அவர் சொல்லி அழைத்தார். எனவே நாங்கள் அவர் வீட்டிற்குச் சென்றோம். செட்டியார் அவர்கள் நேராக அலுவலகத்திலிருந்து அங்கே வந்துவிட்டார். அனைவரும் உணவு கொண்ட்பின், வீடு திரும்பினோம். மணி மூன்று ஆனபடியினால் நாங்கள் உடன் விமான நிலையம் புறப்படத் தயாரானோம். அன்னையார் அவர் களும் உடன் விமான நிலையம் வருவதாகச் சொன்னார்கள். நான் வேண்டாம் எனக்கூறியும் கேட்கவில்லை. சரி இதுவும் இறையருளே! அம்மையப்பராக வந்து இருவரும் என்னை வாழ்த்தி வழியனுப்புகிறார்கள் என்று மகிழ்ந்தேன்.