பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் எனவே அவர்களைக் கண்டு மகிழலாம். முருகன் பக்த சபையில் பங்கு கொள்ளலாம் என எண்ணி வந்தேன். ஆனால் ஏமாற்றமே மிஞ்சியது. இதுவும் முருகன் அருளே என எண்ணி அமைதியுற்றேன். நான் பாரிசில் தங்க ஏற்பாடு செய்த நேரம் பொருத்த மில்லை என உணர்ந்தேன். தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை; பின்னும் விடுமுறை சில அலுவலகங்களில். விடாத மழை. எல்லா அலுவலகங்களும் பல பெரும் கடை களும் பிற காட்சிச்சாலை முதலியனவும் மூடியே கிடந்தன. தபால் நிலையம் மட்டும். இன்று (சனிக்கிழமை) பகல் 12 வரை வேலை செய்யும் என்றனர். உடனே அத் தபால் நிலையம் சென்று இரு வெளிநாட்டுக் கடிதம் (Air Mal' Letter) வாங்கி ஊருக்கும் இலண்டனுக்கும் எழுதி அஞ்சல் பெட்டியில் இட்டேன். தபால் நிலைய அமைப்பு நம் ஊர் நிலையங்களை ஒட்டியதாகவே இருப்பினும் பெட்டிகள் அமைந்த நிலை சற்றே புதியதாக இருந்தது. மறுபடியும் தபால் நிலையத்திலே முன்சொன்ன மூவருக்கும் தொலை பேசியில் தொடர்புகொள்ள முயன்றேன். ஒரு பிராங்கு இட்டால் உள்ளுரில் எங்கும் பேசலாம். நம் ஊரில் உள்ள தானியங்கிப் பெட்டிகளை ஒத்தே இவை இருக்கின்றன. எனவே தொல்லையில்லை. ம்றுபடியும் யாரையும் காண முடியவில்லையே என்ற சோர்வோடு விடுதி திரும்பினேன். பலப்பல உயர்ந்த கட்டிடங்களைக் கண்டேன். விடுமுறை யானமையின் தெருவுதொறும் கார்கள் இரு பக்கங்களிலும் வரிசையாக நிறுத்தப்பெற்றிருந்தன. ஆயினும் பலப்பல கார்கள் பறந்தவண்ணம் இருந்ததை எண்ணிப் பார்த்தேன். இங்கே கார் அதிகப் புழக்கத்தில் உள்ளமையின் பஸ் போக்குவரத்து அதிகமில்லை. மேலும் மெட்ரோ ‘Metro' என்னும் பாதாள ரெயில் ஊரின் பல பாகங்களுக்கும் செல்வ தால் அதில் பலரும் விரைந்து செல்கின்றனர். p தூறல் இடைவிடாது இருந்தது: .செய்வதறியாது திகைத்தேன். மெல்ல விடுதிக்குத் திரும்பினேன். வரும்