பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/64

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் உள்ளது. (அதாவது 750 ரூபாய் முதல் 1600 வரை) பார்வைக்கு ஒரே வகையில் இருந்தாலும் அவற்றின் தோல், ரெக்சைன், பிளாஸ்டிக் முதலியவற்றின் தரம் தன்மை முதலியனவும் செய்தொழில் அமைப்பு முதலியனவும் இடத்துக்கு இடம் மாறும் போலும். ஒரே பொருள் பெரிய மாளிகைக் கடைகளில் 2000 ரூபாய் என்றால் சாதாரணக் கடைகளில் 1000க்குக் கிடைக்கும். கம்பியூட்டர் 3000 பிராங்கு முதல் 30,000 பிராங்கு வரையில் பலவகையில் வைக்கப் பெற்றிருந்தன. உடைவகையிலும் காலணி போன்றவற்றிலும் எண்ணற்ற வகைகள் - எட்டிப்பிடிக்க முடியாத விலைகள். சாதாரண கோட்டும் சூட்டும் 1000 முதல் 3000 வரையில். இப்படியே ஒவ்வொரு பொருளும் விற்கும் இடம், தன்மை, அம்ைப்பு, செய்திறன் முதலிய வற்றால் பல வகைகளில் மாறுபடக் கண்டேன். இங்குள்ள விடுதிகளைப் பற்றியும் சில எழுத வேண்டும். ஒரு நாளைக்கு 50 பிராங்கு முதல் 2000 பிராங்கு வரை வாங்கும் விடுதிகள் பல உள்ளன. பெரியவை கேளிக்கை களும் பிற சிறப்புகளும் உடையன. அறைகள் மிகச் சிறந்த முறையில் மணவறைகள் போல உள்ளன. ஒரு விடுதியில் உள்ளே சென்று பார்த்தேன். பல வண்ணப்படங்கள், டி.வி. தொலைபேசி, இதுபோன்ற இன்னும் சில நவீனக் கருவிகள், மெல்லிசை ஒலிக்கும் குழாய்கள், அழகான குளியல் அறை (பலர் சில நாட்கள் குளிக்கவே மாட்டார்கள் போலும்) முதலிய உடைய அறை. வெளியே கார் விட வசதி, தோட்டம்,பொழுதுபோக்கு அறை இன்ன பிற ஏற்பாடுகள். சென்னையில் உள்ள சில ஒட்டல்கள் போன்று இங்கேயும் காதலர்கள் தங்கி மகிழ்ந்து செல்லுவர். மிக அதிகமாக அத் தகைய கூட்டம்தான் வரும் என்கின்றனர். - - , இவையன்றி நடுத்தர விடுதிகளும் உள்ளன. நாளைக்கு 400, 500 வரை எல்லையிட்டு அதற்கேற்ற வசதிகள் செய்து தரப் பெற்றுள்ளன. அதற்கடுத்து 200, 300க்கும் பிறகு 100-150க்கும், அதற்குப்பின் 70, 80ம் கடைசியாக 50,