பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/66

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் தொல்லையின்றேனும், காண வேண்டிய முக்கியமான இடங்களைக் காணமுடியவில்லை. பேராசிரியர் குரோ அவர்கள் பல்கலைக் கழகத்துக்கு வரச் சொன்னார். ஆனால் பல்கலைக்கழகத்துக்கு விடுமுறை - அவர் வீட்டு முகவரியும் தொலைபேசியும் தெரியவில்லை. சிலருக்குத் தொலை பேசியில்லை; இடம் தெரிந்து செல்ல மழை தடையாயது. ஒருவர் இடம் மாறினார். இப்படிப் பலப்பல மாறுபாடு களால் முக்கியமான இடங்களை - கல்வி நிலையங்கள் - பல்கலைக்கழகங்கள் . சமய இடங்கள் (ஒரு மாதாகோயில் தவிர) பொது இடங்கள் ஆகியவற்றைக் காணமுடிய வில்லை. எனினும் பொதுமக்களோடு கலந்து பழகும் நல்வாய் பினையும் விடுதியில் பல நாட்டு மக்களுடன் கலந்து பேசும் வாய்ப்பினைப் பெற்றேன். இலங்கை நாட்டு நண்பர் தி. சுதா காலையில் சொன்னபடி மற்றொரு நண்பருடன் மாலை மூன்று மணி அளவில் வந்தார். இரவு 8 மணி வரையில் பொழுது உள்ளமையின் பல இடங்களைக் காண முடியும் என்றார். மூவரும் (Matro) மெட்ரோவில் புறப்பட்டோம். இரண்டு இடங்களில் இரெயில் மாறி, பின் வெளியே ஒடிற்று. நாங்கள் உலகிலேயே மிக உயர்ந்த கோபுரமாக உள்ள இந் நகரின் பழைய சின்னத்தைப் பார்க்க உரிய இடத்தில் இறங்கினோம். அந்த உயர்ந்த கோபுரத்தைச் சுற்றி ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். நல்ல மாலை வெய்யில், பலர் மகிழ்ச்சியில் கூத்தாடினர் - பாடினர் - கூவினர் . எக்களித்தனர். அவருள் பலர் வெளிநாட்டவரே என்றார் நண்பர். எங்கும் ஆரவாரமும் குதூகலமும் நிரம்பி வழிந்தன. பலர் கோபுரத்தின் உச்சிக்கு மின்னியங்கித் துணையுடன் ஏறிக்கொண்டிருந்தனர். நான் அதை நினைத் துக்கூடப் பார்க்க முடியவில்லை. அண்ணாந்து பார்த்தாலே மயக்கம் வரும் போலிருந்தது. அந்த இடத்தை முற்றும் சுற்றிப்பார்த்து, அருகிலுள்ள ஒரு கிடைக்குள் நுழைந்தோம். இங்கே கோபுரம் போன்ற இந்நகரத்தின் பழமை குறிக்கும்