பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 - ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் நூல் நிலையத்திலிருந்து வெளிவந்தபோது ஏழு மணிக்கு மேல் ஆகியிருந்தது. எனினும் வேறு பல இடங்களையும் கண்டோம். அணையா விளக்கு இருப்பதை அறிந்தோம்: கண்டோம். பின் அவர்கள் தங்கியுள்ள இட்த்துக்கு என்னை உணவு உட்கொள்ள அழைத்தனர். அவர்களுடன் சென்று அவர்தம் அறையை அடைந்தேன். அறை 16x8 அளவுதான். அதில் ஒருபுறம் கழிவிடம், ஒருபுறம் சமையல், மற்றொரு புறம் படுக்கை. இந்தச் சிறிய இடத்துக்கு 2000 பிராங்கு (சுமார் 3000 ரூபாய்) வாடகை என்றனர். திகைத்தேன். பாரிஸ் இடநெருக்கடியின் நிலையை உணர்ந்தேன். அந்தச் சிறிய அறையில் ஐவர் தங்கி, தாமே சமைத்து உண்டு, பல விடங்களில் பணியாற்றி வாழ்கின்றனர். இருவர் மணமான வர். எனினும் அவர்கள் தனிக்குடித்தனம் வைக்க இடம் கிடைக்கவில்லை. எத்தனை அகலமாக - அன்றி உயரமாக இந்நகரம் வளர்ந்தாலும் இடப்பிரச்சினை என்றும் தீராது என்றனர் பலர். - - - - அனைத்தையும் பார்த்த எனக்கு, பள்ளிக்கூடம் ஒன்றை யும் காணவில்லையே என்ற ஏக்கம் இருந்தது. அதை அறிந்தோ அறியாமலோ, நான் அவர்கள் அறையில் தங்கியிருந்தபோது, ஒரு பள்ளியைப்பற்றிச் சுமார் 40 நிமிடங்கள் (T. W.) தொலைக்காட்சியில் காட்டினர். அதைப் பார்த்தபின்னர், நான் பள்ளிகளுக்குப் போகாமல் இருந்ததே சரி என உணர்ந்தேன். நம் நாட்டுச் சீருடை இங்கே இல்லை. சில ஆண்டுகளுக்கு முன் இருந்ததாம், நாடெங்கும் உள்ள மாணவர் அது கூடாது என்று கிளர்ச்சி செய்து அரசாங்கத்தையே அதிரவைத்து பள்ளிக்கு வெளியே நின்று ஆரவாரம் செய்து சீருடை வேண்டாம் என்ற முடிவினைப்பெற்றனராம். எனினும் காட்சியில் அப்பிள்ளை களையும் அதில் அவர்கள் பலவகை உடையணிந்து புழங்கும் நிலையினையும் கண்டபோது வருந்தினேன். பலவகை உடைகள்; ஆணும் பெண்ணும் கலந்து பழகிய முறை: ஆசிரியர்களைத் திணர வைக்கும் மாணவர் செயல்: இன்னபிற அது பள்ளியா என நினைக்கவைத்தன.