பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54. ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் மேலோடிகள் ஐந்து அல்லது ஆறு சாலைகள்கூ பிடப்ரித்துக் காட்டும். எங்கும் அந்த விடியலிலும் புழக்கம் அதிகமாக இருந்தது. வண்டி சுமார் 40 நிமிடங்கள் வந்தது. 110 கிலோ மீட்டர் வேகம். எனவே சாலை விதிப்படி சிகப்பு விளக்கின் முன் நின்றனபோக அரைமணி நேரமாயினும் ஒடியிருக்கும். எனவே குறைந்தது 40 (அ) 45 கிலோ மீட்டர் இருக்கும் (ஒரு கி. மீ. நம் நாட்டுக் கணக்குப்படி சுமார் 7.50ருபாய். வாடகையாகின்றது). வண்டியை விட்டு விமான நிலையத் தில் இறங்கியதும் மற்றொரு மாற்றம். வண்டியை ஒட்டி வந்தவர் ஒரு பெண். இங்கெல்லாம் ஆண்களைக்காட்டிலும் பெண்கள் அதிகம் கார் ஒட்டுவார்களோ என எண்ண வேண்டியுள்ளது. விடியற்க்ாலை (சூரியன் 8க்குத்தான் புறப்படும்) 5 மணி அளவில் தைரியமாக ஒரு பெண் தனியாக வாடகை வண்டி ஒட்டி வருகிறார் என்றால் வியக்கத்தானே வேண்டும். மேலும் அப் பெண் விம்ான நிலையத்தில் நடந்து கொண்ட விதம் வெறுப்பைத் தந்தது. இங்கெல்லாம் ஊர்தி . ஒட்டுநர் நேர்மையானவர் எனப் பலர் சொல்லினர். அந்த்ச் சொல்லை இப் பெண் பொய்யாக்கினார். சாமான்களை இறக்கி வைத்து விட்டு 220 பிராங்கு தரவேண்டும் என்றார். நன்கு விடியவில்லை; மின்ஒளி பகலிலும் அதிகமாக ஒளி வீசிக்கொண்டிருந்தது. 6.45 இருக்கும். பலர் இறங்கிக் கொண்டிருந்தனர். நான் தாழ்வாக 200 தானே என்றேன். அவள் மீட்டரை'க்காட்டி 220 ஆகியிருக்கிறது என்றாள். நான் சொன்னபடி 200 தான் தருவேன் என்றும் புறப்படும் போது மீட்டரைக் காட்டவில்லையே என்றும் கூறினேன். உடனே அவள் அருகிலே உள்ள காவல் நிலையத்துக்கு வா' என்றாள். ஏதடா தொல்லை என்று 220 பிராங்கு கொடுத்துவிட்டு, விமானநிலையத்துள் புகுந்து கொண் டேன். . . - - . காலைப்பொழுது இனிமையாக விடிந்தது, எங்கும் குளிர்ச்சி; இனிமை. பார்க்குமிடமெங்கும் பசுமை. மக்கள் புழக்கம் அதிகம் இல்லை. நான் என்னிடமிருந்த 600