பக்கம்:ஏழு நாடுகளில் எழுபது நாட்கள்.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68 ஏழு நாடுகளில் எழுபது நாட்கள் வாழ்க்கையினை முறையாகக் காட்டிய படிமங்களும் உள்ளன. எங்கும் மேலும் சுற்றிலும் - வண்ணக் கலவை கொண்டு தீட்டிய எண்ணற்ற ஒவியங்கள் காட்சியளித்தன. சில ஆயிர்ம், ஆயிரத்தைந்நூறு ஆண்டுகளுக்கும் முற்பட்டன என்றனர். உயர்ந்த கோபுரத்து உள்ளீடுகளெல்லாம் பழம்பெரு வரலாற்றுக் கூடங்களாக விளங்கின. இவை பற்றிய விளக்கங்களைச் சொல்வார் இவ்ர். Guide' எனும் வழிகாட்டிகள் நம் நாட்டில் உள்ள சிலரைப்போன்று ஏதேதோ சொல்லுகின்றனர். இவற்றின் வரலாற்று முக்கி யமோ. சிறப்பியல்புகளோ அவர்களுக்கு ஒன்றும் தெரிய வில்லை. ஏதோ மிஷன் போன்று, யாரோ சொல்லிக் கொடுத்ததை அப்படியே ஒப்புவிக்கின்றனர். பல புரை களைக் கண்டு, அகன்ற வெளியிடத்துக்கு வந்தேன். உயர்ந்த கோபுரத்துக்கு ஏற மின் ஏற்ற முறை இருந்தது: என்றாலும் நான் சொல்லவில்லை. - திரும்பவும் குழந்தைராஜ் அவர்கள் தங்கிய இடத்துக்கு வந்தேன். அவர் உண்மையிலேயே குழந்தையாக இருந்தார். தமிழ் நாட்டிலிருந்து வந்திருக்கும் ஒரு சில பாதிரிமார்களை எனக்கு அறிமுகப்படுத்தினார். நான் வழியிடை வந்தபோது, திசை மாற, அங்கே இரண்டு மலையாள அன்னையரே (Mothers) எனக்கு வழிகாட்டினர்-அண்டைநாடான தமிழ் நாட்டில் இருந்துவந்த எனக்கு வாழ்த்துத் தந்து வழிகாட்டி னர். குழந்தைராஜ் அன்று இரவு உயரிய மலைக்குச் சென்று சுற்றுப்புரத்தைக் காணலாம் என்றார். இந் நகரின் நடுவில்: ஒரு சிற்றாறு ஓடுகிறது.எப்போதும் தண்ணீர் ஓடிக்கொண்டி ருக்கிறது. சுமார் 20கல் (32 கி. மீ.) தூரத்தில் உள்ள கடலில் இது கலக்கிறதாம். இங்கே தெருக்களில் எப்போதும் குழாய் களில் தண்ணீர் வேகமாக வந்துகொண்டே இருக்கின்றது. தண்ணிர்ப் பஞ்சமெல்லாம் இங்கே என்றும் தலைகாட்டிய தில்லையாம். நான் சென்னையை நினைந்து வெம்பினேன். இருவரும் பஸ் வழி உயரிய மல்ை உச்சிக்குச் சென்றோம். அங்கிருந்து உரோமின் பல பாகங்களைக்