பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

________________

14 டிரைபசினுடைய மனைவியின் கண்கள் நம் பிக்கையால் ஒளிவிட்டன. வழக்கறிஞர் லபோ ரிக்கு ஒவ்வொரு வினாடியும் யுகம்போலத் தோன் றியது. அனதேல் பிரான்சுக்கு உட்கார முடிய வில்லை. எல்லோருக்கும் வணக்கஞ் செலுத்தி விட்டு ஜோலா தன் கையெழுத்துக் கட்டைப் புகட் டினான். பிரெஞ்சுக் குடியரசின் தலைவரே........ டிரை பஸ் வழக்கு பிரெஞ்சு நீதியின்மீது அழியாத களங் கத்தை ஏற்படுத்தியுள்ளது......"!" தாள். டிரைபசின் மனைவி மகிழ்ச்சியால் முகமலர்ந் ஜோலா கண்ணாடியைக் கழற்றிக் கண்களைத் துடைத்தார். அறையில் அமைதி நிலவியது. டிரைபசின் சகோதரரின் கன்னத்தில் கண்ணீர் வழிந்தது. "அநீதிக்கு வழிவிட்டு நாம் அமைதியாக வாழ முடியாது. டிரைபஸ்மீது பல குற்றங்கள் சுமத் தப்பட்டிருக்கின்றன. அவன் நன்றாகப் படித் தவன் - குற்றம். சலியாத உழைப்பாளி -- குற்றம். உண்மையான சாட்சியங்கள் அவனுக்காதரவாய்க் கிடைக்கவில்லை - குற்றம். அவன் ஒரு யூதன் குற்றம் - அவன் கலங்காதவன் - குற்றம். அவன் கலக்கமடைந்தான் - குற்றம்'. துடிதுடிக்கின்ற விரல்களால் மற்றொரு பக் கத்தைப் புரட்டினார், குரல் இன்னும் கனத்தது. "யுத்த மந்திரி, இராணுவக் குழுவினர், படைத் தலைமை எஸ்டர் ஹேவமியைச் சந்தேகிக்க மனமொப்பவில்லை. ஓராணடிற்கு முன்பிருந்தே அவர்களெல்லோருக்கும் நன்றாகத் தெரியும் டிரை