பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15

________________

  1. 5

பஸ் குற்றமற்றவனென்று. குற்றமற்றவன் தீவில் வாடும்பொழுது, அநீதி வழங்கியவர்கள் அமைதி யாக வாழகிறார்கள், மனைவி மக்களிடம் அன்பு பாராட்டி, மனிதாபிமானமுள்ளவர்களாக." நிர்த்துளிபடர்ந்த கண் கணாடியைத் துடைத்துக் கொண்டு ஜோலா மேலும் படிக்கலானார். "இராணுவக் குழுவினர் எஸ்டர் ஹேசை விசாரித்தனர்.ஏன்? டிரைபஸை மற்றுமொரு முறை தண்டிக்க! இது உண்மை, ஆனால்.பயங்கர மான உண்மை. நான் உறுதியுடன் கூறுகிறேன் - உண்மை கிளம்பிவிட்டது, எதுவும் இதைத் தடைசெய்ய முடியாது. ஜோலா உரத்த குரலில் கூவினார். பத்திரி கைக்கூட வாயிலில் மககள் கூட்டம் தேங்கியிருந் தது. கண்ணாடிக் கதவுகளின் வழியாக ஆச்சரிய முற்ற கலங்கிய முகங்கள் துடி துடிப்புடன் காத் துக் கொண்டிருந்தன. 'புகழ்பெற்ற பிரெஞ்சுத் தாயகத்தின் தனிப் பெருந் தலைவரே! மூன்று ஆண்டுகளாக வழக்கை நடந்திய டார்ட் என்பவர் மீது நான் குற்றஞ்சாட்டு கிறேன். கிடைத்த உண்மைக் குறிப்புகளை மறைத்ததற்காக, யுத்த மந்திரியின் மீது நான் குற் றஞ் சாட்டுகிறேன் அதே பழிச் செயலைச் செய்த இராணுவக் குழுவினரையும் உதவிப் படைத்தலை வரையும் நான் குற்றஞ் சாட்டுகிறேன்! கைதியி னிடத்தில் கொடுமை காட்டிய பாரிஸ் சிறைச் சாலைத் தலைவர்மீது நான் குற்றஞ்சாட்டுகிறேன்! வழக்கில் பொய்ச்சாட்சிகளும், பொய்க்கையெழுத் தும் தயார்செய்தவர்கள் மீதும் குற்றம் சாட்டு கிறேன்! பொதுமக்களின் மனதை மாற்றும் வகையில் பொய்ப்பிரசாரம் செய்தயுத்த இலாகா முழுவதை