பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

________________

18 ஜோலா போராடினார். விசாரிக்கு முன்பே முடிவு கட்டப்பட்ட வழக்கில் நீதிக்கு இடமெப்படி இருக்க முடியும்? ஓராண்டு சிறைதண்டனையும், மூவாயிரம் பிராங்கு அபராதமும் ஜோலாவுக்கு விதிக்கப்பட்டது. இராணுவத்தினர் குதூகலித்தனர். வெளியில் கூடியிருந்த கூட்டம் "இராணுவம் வாழ்க! வீழ்க ஜோலா என முழங்கியது. "ஏன் புகழ் மங்கிப் போகலாம்!" "ஆஇல் டிரைபஸ் குற்றமற்றவன் 1!' ஜோலாவின் முழக்கம் அது. புகழ் மங்கவில்லை. பெரியதோர் ஒளியைப் பரப்பிக் கொண்டு கிளம்பிற்று, பாரெங்கும். டிரைபசும் விடுதலை பெற்றான். அது பிறகு. ஆனால் முதலில் வெற்றி இராணுவத்தினருக்கு. 'வீழ்க ஜோலா." முதலில். பிறகே "வாழ்க ஜோலா.' முதலில், ஜோலா, பாரிஸ் பட்டணத்திலே நிலைத்திருக்கவே முடியாத நிலை இருந்தது. நண்பன் பால் ஜோலாவும் அவனுடைய செஸானே என்பவனும் அந்த ஊருக்கு மிகுந்த நம்பிக்கையுடன் தான் வந்தார்கள். பொழுது போவதுகூடத் தெரியாமல் இருவரும் சிறிய வாடகை அறையில் உட்கார்ந்து திட்டமிடு வார்கள்.செஸானே தன் ஓவியத் திறமையால் உலகையே ஆட்ட முடியும் என்பான்; ஜோலா தன் எழுத்தாண்மையால் வாழ்க்கையை வளம் பெறச் செய்யலாம் எனக் கனவு காண்பான். கையிலிருந்த காசு குறையக் குறைய, அவர்க ளுடைய உற்சாகமும் குன்றியது, மிகச் சுலபத் தில் கட்டப்பட்ட கற்பனைக் கோட்டைகள் வெகு விரைவில் தரைமட்டமாயின. மிகுந்தவை இருட் டறையில் உலாவுகிற செஸானேயும், வறுமைச்