பக்கம்:ஏழை பங்காளர் எமிலி ஜோலா.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23

________________

28 பாதுகாப்பளிக்கிற குருமார் கூட்டம்.மறு பக் கத்தில் மெதுவாகத் தலை தூக்குகிற புத்துணர்ச்சி. பிரெஞ்சு மந்திரி சபை மாறியது. உண்மைத் துரோகி எஸ்டர் ஹேஸி கூண்டில் நிறுத்தப்பட் டான். அவனுக்கு உதவியாக இருந்த ஹென்றி தற்கொலை செய்து கொண்டான். எஸ்தர் ஹேஸி நாட்டை விட்டோடினான். முன் வழக்கை ஜோடித்த இராணுவ வழக்கறிஞர் டார்ட் வேலையி லிருந்து நீக்கப்பட்டான். டிரைபஸ் வழக்கு மீண் டும் விசாரணைக்கு வந்தது. 1899-ல் பிரான்சு நாட்டுக்கு ஜோலா, திரும்பி னான். மூன்றாண்டுகளுககப்புறம் துடிதுடிப்பான இருதயம் ஓய்ந்தது. 1902 செப்டம்பர் 76-ல் ஜோலா இறந்தார். அவருடைய முயற்சிகள் வீண் போகவிலலை. நீண்டகால வழக்கின் பின் டிரை பஸ் 1906-ல் தூய்மையானவன் என் முழுவிடுதலை யளிக்கப்பட்டு உயர்ந்த இராணுவப் பதவிகள் கொடுக்கப்பட்டான். அவருடைய கல்லறைக்கருகில் அனதேல் பிரான்சு உணர்ச்சிமிக்க சொற்பொழி வாற்றி னார். "நீதி, உண்மை இவைகளைத் தவிர்த்து வேறெதுவும் அமைதியை வழங்காது, ஜோலா உலக உணர்வின ஆரம்பத்தைக் குறிப்பவர். இலக்கியத்தில் ஜோலா அவருடைய ஏடுகளின் அளவினால் மதிப்பெய்தவில்லை, எளியநடையில் ஒளிவிட்ட கருத்துக்களுககாக, ஏழை எளியோ ரைப்பற்றித் தீட்டிய எழுத்தோவியங்களுக்காக, மூடத்தனம், வெளிவேடம், அநீதி, சுரண்டல் முறை, போர் இவைகளை எதிர்த்து எழுதியதற்காக மட்டுமல்ல; சமயம் நேர்ந்தபொழுது தனது தள் ளாத வயதில் பலமிக்க இராணுவம், அதிகார