பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/11

விக்கிமூலம் இலிருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

பொற் கோட்டு இமவான் மகளே புவனேஸ்வரி
அம்பிகே துர்கா அங்காள பரமேஸ்வரி
சங்கரி நந்தினி சவுந்தரி ராஜேஸ்வரி
ஓம் சக்தி பராசக்தி உமா மகேசுவரி
கங்கா பவானி கௌரி கௌமாரி
வான்மாரி பொய்ப்பினும் வரன் மாறி பொய்க்காது
கருமாரித் தாயே காளியே கூளியே
ஆரணத்தின் பெரும் பொருளே நாரணர்க்கு இளையவளே
ஓங்கார வடிவே ஆங்கார வல்லி
ஊங்கார தொனியே ரீங்கார வல்லி
கதிராய் நிலவாய் காய்கின்ற ஒளிச்சுடரே
காற்றாய் வெளியாய் கனலாய்ப் புனலாய்
மணலாய் மலர்ந்த சராசரமே
பெண்ணே நின்பெருமை பேசவல்லேன் அல்லேன்
எனச்சொல்லும் பொருளும் தொடரத் தொடர
உருகினான் உள்ளத்திரையில் உருவகப் படுத்தினான்.
அதுபோது ஒருகிழவி அங்கே வந்தாள்
உலைபொங்கி வழியக் கண்டாள்
எரிந்த விறகை வெளியில் இழுத்தாள்
வழிந்த சோற்றை வழித்துச் சுவைத்தாள்

பொங்கலில் ஒருகல் உப்பு குறைகின்றதே