பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/10

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9

தென்கரையில் நின்றவூர் தேரழுந்தூர்
ஆறை நகருக்கு கிழக்காக ஒரு காவதத்தில்
ஆமருவியப்பன் கோயில் கொண்ட திருத்தலம்
தில்லையில் கூத்தனுக்கு பொன்வேய்ந்த கூரை
சடையப்பன் குடியிருந்தது கதிர்வேய்ந்த கூரை

தேரழுந்தூருக்கு வடக்கில் வளம்பெற்ற சிற்றூர்
வழக்கில் கதிர்வேய் மங்கலம் என வழங்கினார்.
வடமொழியில் வலியகவி காளிதாஸன்
தென்மொழியில் பெரியகவி காளிக்கு பூசாரி
கம்பனை மிஞ்சாரு கொம்பனும் பிறக்க வில்லை.

வழிபாடு
ஊருக்கு வடகிழக்கில் ஆற்றுப் படுகையில்
நான் மாட வீடொன்று காளிக்குக் கோயில்
நாள்தோறும் உச்சிக்கு பூசை வைப்பான்
படையலுக்கு பொங்கல் பொங்குவான் பக்திக்கு
உணர்வு பொங்கும் அவன் இதயத்திலே .
வழக்கம்போல் கம்பன் பூசைக்கு வந்தான்
கோயில் முற்றத்தில் உலையைப் பூட்டினான்
அலரியும் செம்பருத்தியும் தாழ்வரையில் கொட்டினான்.

நாரெடுத்து தொடுத்தான் நாவசைந்து துதித்தது.