பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8


கங்கைக்கு அப்பால் வங்கத்தில் புகழ் நிறுத்திய
வீர ராஜேந்திரன் ஒருசோழ பூபதி
தில்லையில் பொன் வேய்ந்த இரண்டாம் குலோத்துங்கன்
தொண்டர் புராணம், கண்ட புகழ்ச் சோழனே
என்றின்ன வரலாற்று மாவீரர் வழி வந்தவன்
சோழர்மகள் வழிப்பேரன் முன்றாம் குலோத்துங்கன்
முடிகொண்ட சோழபுரம் என்னும் பழை யாறை
அவனது இரண்டாம் தலைநகர், வட தளி என்பார்.

செம்பியன் மாதேவி அவன் மனைத் தலைவி
புவன முழுதுடையாள் என்றும் சொல்லுவர்
கூத்தர் புகழேந்தி அவனவைக்குப் புலவர்
சடையப்ப வள்ளல் அவன்சபையில் பெரியவர்
அமராவதி அவன்குடிக்கு ஒருமகள் தமிழ்மகள்
கலிங்கத்து பரணிகொண்ட தலைமுறைக்கு
வேலனும் ஒருகாவியம் படைக்கின்றான் வணக்கம்.

தலைமகள் அமராவதி காவலன் பெற்ற மகள்
தலைமகன் அம்பிகாபதி பாவலன் பெற்றமகன்
அம்பிகாபதிக்குத் தந்தை கம்பன்
அவர் அழுந்தூர், காளி கோயில் பூசாரி

காவிரிக்கு ஒருகிளை வீரசோழன்