பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

18

வருந்தினாள். அவள்மனம் மன்னிப்புக் கோரியது
ஆதித்த உவச்சனுக்கு மகிழ்ச்சி. கம்பனை
மகனாகத் தந்த தெய்வத்தை வாழ்த்தினான்
கம்பன் செய்து வந்த காளி பூசை
தாழிலெனத் தொடர்ந்தது.தொடர்ந்து தவமாயிற்று
முன்னைப் புலவர்களின் உள்ளத்தில் ஊற்றெடுக்க
புலமை வெள்ளம் பெருக்கெடுத்து திரண்டதோ
வெள்ளைத் தாமரையில் வீற்றிருந்த கலைமகள்
கம்பனின் உள்ளக் கமலத்தில் இடம் பிடித்தாளோ
வடமொழி வழக்கில் இல்லை என்று வருந்திய
வால்மீகி கம்பனாய் வந்து பிறந்தானோ?
பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமகனை
தமிழ்க் கடலில் தொட்டிலிட்டுத் தாலாட்ட
சங்கத் தமிழும் சந்தத் தமிழும்
வந்தனை செய்தனவோ? வாழியவேகம்பர்.

புதுவைச் சங்கரன் தலைமகன் சரராமன்
வெண்ணை நல்லூர் சடையன் என்பார்
கொடையில் கர்ணன் அறத்தில் தருமன்
தமிழில் தார்வேந்தனை மீறிய கீர்த்தி
புகழில் வள்ளல் எழுவரை மிஞ்சினான்.
குலோத்துங்கன் தமிழ்நெஞ்சம்; வாழ்த்திற்று

அரசியலோ சடையனை தனிப்புகழுக்கு இடமின்றி