பக்கம்:ஏ. கே. வேலனின் எழுத்துக்கள்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19


ஆசைத் தீயில் வெந்தது போதுமடா
அச்சத்தை வளர்த்து கவலை கொடுத்து
பாரத்துக்கு ஆணிவேர் ஆகும் உணர்வு
காம வெறிக்கு கண்ணை மறைத்தும்
சினத்தின் பிறப்பிடம் ஆகும் சிற்றுணர்வு
மயக்கப் படுத்தும் மானத்தை வாங்கும்
புத்தியைக் குறைத்து புலன்களை அழித்து
அறிவழிந்து நிலை குலைந்து நிற்கவைக்கும்
பெரும்பித்த உணர்வுக்குப் பேர்தான் ஆசை

அனைத்துக் கேட்கும் அதுவே வழித்தடம்

காண்டீபன்

ஆசை தீதென்று அறிக்கையிடும் பெருந்தகையே

கோகுலத்தில் நீ ஆடிய ஆடல் என்னவோ?

கண்ணன்

வெண்ணை திருடினேன் அது சின்ன வயது
சிற்றாடைக் கட்டத்டுதரியாத இளம் சிறுமியர்
மேலாடையைப் பறித்தேன் இழிவென்ன கண்டாய்?
மங்கையர் உச்சிமோந்த மழலைப் பருவமடா
உரிகளை உடைத்தேன் உரலில் கட்டுண்டேன்
மாடு கன்று மேய்த்தேன் மடுவில் குதித்தேன்
என்பது இந்த உலகத்துக்கு மாயை
என்னைப் பொறுத்தவரை அனைத்தும் கர்மமே
மனம் ஒன்றித்த செயற்பாடு அறிக.
என் அத்தை ராதை தவத்தின் தலைமகள்
காமத்தை வென்று விட்ட யோகி

தியானத்தில் மூழ்குவாள் நான் தேவன் என்பதால்