10
ஏ, தாழ்ந்த தமிழகமே!
நேற்று இல்லை; இன்று இருக்கிறது; நாளை நீடித்திருக்க வேண்டும். நிலைத்திருந்தால்தான், ஒரு பாரதிதாசன் அல்ல; எண்ணற்ற பாரதிதாசர்கள் தோன்றுவார்கள். அவர்களைக் கண்டு. அவர்கள் காட்டிய வழிகளைத் தமிழகமும் தமிழரும் பின்பற்றிப் பயனடைய ஏதுவாகும்.
சங்க இலக்கியம்
கவிஞர்களையும், மற்றவர்களையும் அன்று போற்றாததற்கும், இன்று போற்றுதற்கும் இன்னுமொரு காரணமுண்டு. சங்க இலக்கியங்களிலே. நமது கண்ணும் கருத்தும் படாதபடி திரையிட்டு வந்தார்கள். உங்களில் பலர் சங்க இலக்கியங்களைப் படித்திருக்கலாம். சிலர் புரிந்து கொண்டிருக்கலாம்; சிலர் புரிந்ததுபோல் பாவனை காட்டலாம். நான் சங்க இலக்கியங்களைப் படித்தவனல்லன்: அல்லது படித்தவனைப்போலப் பாவனை செய்பவனுமல்லன். அதற்காக வெட்கப்படப் போவதுமில்லை. சங்க இலக்கியங்களை நான் படிக்கவில்லை என்றால், அதற்குக் காரணம் எனது அறியாமையல்ல. என் கண்முன் சங்க இலக்கியங்கள் நர்த்தனமாடவில்லை. என் கண்முன் அவைகளைக் கொண்டு வந்து புலவர் பெருமக்கள் நிறுத்தவில்லை.
யார் அணுகுவார்கள்?
நாவலர்களும், பாவலர்களும் சங்க இலக்கியங்களைச் சுற்றி நாலு பக்கமும் வேலிகள் அமைத்து, இங்கு எட்டாத அளவுக்கு எட்டடி உயரத்தில் எழுப்புச் சுவரை எழுப்பி வைத்துக் கொண்டும் “உள்ளே ஆடுது காளி வேடிக்கைப் பார்க்க வாடி” என்பதுபோலத் ‘தொல்காப்பியத்தைப்பார், அதன் தொன்மையைக் காணீர்’ என்றால் அதனிடம் யார் அணுகுவார்? சங்க இலக்கியங்களை வீட்டைவிட்டு வெளியேற்றி, நாட்டிலே நடமாட விடவேண்டும். நடன சுந்தரிகளாகச் சிறுசிறு பிரதிகள் மூலம், தொல்காப்பியக் கருத்துக்களைத் தொகுத்து வெளியிட்டால்தான் தொல்காப்பியம் சிறுசிறு குழந்தைகளாக ஒவ்வொருவரு-