உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏ, தாழ்ந்த தமிழகமே!

9

தமிழ் மொழி என்றால் அது உத்தியோகத்திற்கு லாயக்கானதல்லவென்றும், தமிழ் படித்த ஒருசில வட்டாரங்களிலே உலவி வந்ததும், தமிழ்நாட்டின் எல்லையைக் குறிக்க வந்தால், தமிழனுடைய மேன்மையைப் — பண்பைக் குறித்தால், தமிழனுடைய தனித்தன்மையைக் குறித்தால், நாம் நாட்டுக்குச் செய்கின்ற நாசகாரியங்கள் என்று தவறாகத் தெரியாமல், பாமரர்களும், படித்தவர்களும் கருதினதும் தான் ஆகும்; தெரிந்து, பாமரர்களுக்குப் பரிந்து பேசுவதுபோல, நடிக்கும் நயவஞ்சகர்கள் நாட்டிலே உண்டாக, எத்தர்களும் ஏமாளிகளும் ஏற்பட்டனர். ஏமாற்றி வாழ்பவன் எத்தன்; ஏமாறுபவன் ஏமாளி. தன்னுணர்வு அற்ற மக்களால் தமிழும், தழிழ் அறிஞர்களும், போற்றப்படாமல் மூலை முடுக்குகளிலே தூங்கிக்கிடந்தனர்.

ஆனால் இன்று, தூங்குகிறவர்களைத் தட்டி எழுப்புகின்றனர். துக்கப்படுகிறவர்களுடைய துயரத்தைத் துடைக்கின்றனர். தேம்பித் திரியும் கவிவாணர்களைத் தேடிப்பிடித்து, அவர்களை மார்போடு அணைத்து உச்சி மோந்து, முத்தம் கொடுத்து உள்ளம் பூரிக்கின்றனர். இவனா, இவன் என் இனத்தவன். அது தமிழா? அமிழ்தினுமினியதல்லவா? அவனா, அவன் ஓவியக்காரன்; அவன் ஓவியங்கள் ரவிவர்மா படத்துடன் போட்டியிடும். அவன் தமிழிசைவாணனா? தமிழிசை எந்த விதத்திலும் தெலுங்கைவிடக் குறைந்ததல்லவே! அவன் நடனக்காரன்; அவனது நடனம் வட நாட்டு நடனத்தைவிட ரம்யமாக இருக்கும்! அவன் நடிகன், மேல்நாட்டு நடிகனும் அவனிடம் தோற்று விடுவான். தமிழ் நாட்டு நடிகன் நமது இருதயத்தைத் தான் நடிக்கும் நாடக மேடையாக்கிக் கொள்கிறான்.அவன் கவிஞன்; அவன் பாக்களில் ஓர் அடிக்கு, மேல் நாட்டிலே. ஓராயிரம் பொன் கொடுப்பார் என்று இன்று தமிழ் அறிவாளிகளை, சிற்பிகளை, சிந்தனையாளர்களை, கவிஞர்களை, கலைவாணர்களை தமிழகம் போற்றுகின்றது. இந்த நிலை