8
ஏ, தாழ்ந்த தமிழகமே!
மாணவர்களிடையேயும் தென்பட்டது. தமிழ் வகுப்பு என்றால் இஷ்டப்பட்டால் போகிற வகுப்பு என்று நினைத் தார்கள். தமிழ் வகுப்பு நடந்து கொண்டேயிருக்கும். தெய்வயானையை விட்டு விட்டு வள்ளியைத் தேடிக் கொண்டு முருகன் போவதுபோல், மாணவர்கள் வாத்தியாரை விட்டுவிட்டு வெளியே போய்விடுவார்கள். ஆனால் அந்த நிலை இன்று மாறிவிட்டது. எங்கு சென்றாலும் தமிழ், தமிழர் என்ற பேச்சுக்களையே நான் பார்த்திருக்கிறேன். ஓரிரண்டு ஆண்டுகளாக, ஆங்கிலத்திலேயே பேசுவேன் என்று சபதஞ்செய்து கொண்டிருந்தவர்கள்கூட, 'இன்று தமிழிலேயே பேசுவேன்; தமிழிலேயே எழுதுவேன். எண்ணுவேன்' என்று சொல்லுவதை. தமிழிலே கவிதைகள்; தமிழிலே நாடகங்கள்; தமிழிலே இசைகள்; இவைகளை, யாரும் எங்கு சென்றாலும் பார்க்கலாம். நேற்றுக் கூப்பிட்டிருந்தால் 'வரமாட்டேன்' என்று இன இறுமாப் புடன் இருந்திருப்பவர்கள்கூட, இன்று தாமும் தமிழர், தமிழர் இனம் என்று சொல்லிக் கொள்ள முற்படுகிறார்கள். ஆனால், இந்த நிலை என்றும் மாறாமல் நிலைத்திருக்குமாக !
நேற்றைய உறக்கம்
இன்றைய விழிப்பு
என்ன ! இவ்வளவு நாளுமில்லாததோர் விழிப்பு, ஓர் உணர்ச்சி, தாய்மொழிப்பற்று. தன்னினப்பற்று தமிழர்களிடையே ஏற்பட்டதற்கு, தமிழன் தன்நிலை உணர வந்ததற்குக் காரணம், இந்தப் புரட்சிக்கவி பாரதிதாசன் நேற்று இல்லை; இன்று, இருக்கிறார் என்று சொல்லுவேன், என்று நீங்கள் கருத்தினால், அப்படிச் சொல்பவனல்லன். அவருக்கு முன்னால் இருக்கும் பெயரே, அவருக்கு முன் மாபெருங்கவி பாரதியார் இருந்தார் என்பதை நினைவூட்டுகிறது. கவிகளும் புலவர்களும் இதற்குமுன் இருந்த இழிநிலைக்கும், தமிழிடையே தமிழர் பற்றுக் கொள்ளாததற்கும் காரணம்: தமிழ்நாடு என்றால், அது குறுகிய மனப்பான்மை என்றும்,