ஏ, தாழ்ந்த தமிழகமே!
7
ரசத்தைப் பற்றியோ, அல்லது அவைகளுக்கு விளக்க உரையோ, விரிவுரையோ கருப்பொருளோ, பருப்பொருளோ கொடுக்கஅல்ல, நான்பேச இருப்பது.
நல்ல காலம்
இப்பொழுது தமிழிலே பாடுகின்ற, தமிழுக்காக உழைக்கின்ற எல்லாக் கவிவாணர்களையும் தமிழ்நாடு வரவேற்கின்றது. எக்கட்சியினராயினும், எம்மதத்தினராயினும், எக்கொள்கையினராயினும் செய்கிற தொண்டு தமிழுக்கும் தமிழ் நாட்டிற்கும் பயன்படுகிறதென்றால், தமிழனுடைய உள்ளம் குளிர்கிறது. உடனே கவிகளைக் கட்டி அணைக்கத் தனது இரு கரங்களையும் நீட்டுகிறான்; பாராட்டுகிறான்; பரிசளிக்கிறான். இது நாட்டின் நற்காலத்திற்கோர் எடுத்துக்காட்டு.
இதற்கு முன்
இதற்கு முன்பெல்லாம், கடந்த 10, 15 ஆண்டுகளாக, இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்தது கிடையாது. கவிகளை மக்கள் கனவிலுங்கூடக் கருதினாரில்லை. தமிழுந் தன்னந்தனியே தமிழரை விட்டுப் பிரிந்து உலவிற்று. உதாரணமாக, அப்பொழுதெல்லாம் தமிழ் ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் எவ்வளவு தொடர்பு இருந்ததென்றால், முருகனுக்கும் தெய்வயானைக்கும் எவ்வளவோ அவ்வளவு. தமிழ்ப் பண்டிதர்களுடைய நிலையே தனி. அவர்கள் சரிந்த தலைப்பாகையும், உலர்ந்த கண்களும், ஒட்டிய கன்னங்களும், வீட்டில் அரைடஜன் குழந்தைகள் என்ற எண்ணமும், குறைந்த ஊதியமும் அவர்களைப் பரிதாபகரமான நிலையிலே கொண்டுவந்து நிறுத்திற்று. அதிக ஆற்றலிருந்தும், ஆங்கிலம் கற்காத காரணத்தால் நிலை தாழ்ந்தது. தமிழனுக்குத் தாய் மொழியைக் கற்றுக்கொடுத்த காரணத்திற்காகச் சம்பளம் குறைந்தது. அவர்களை இகழுவது, தள்ளிவைப்பது ஆகியவைகளின் பிரதிபலிப்பு