உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஏ தாழ்ந்த தமிழகமே.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஏ, தாழ்ந்த தமிழகமே!

13

அவ்லவா என்று பார்த்துக் கொண்டால் போதும் என்றெண்ணிவிடும் நயவஞ்ச நாசக்காலர்கள் நாட்டிலே உலவி வருகிறார்கள்.

பிரசாரம்

கம்பனுக்குப் பிறகு எவ்வளவு கவிவாணர்கள் தோன்றினாலும், கம்பனுக்குமுன் பலர் இருந்த போதிலும், அவர்கள் வெறும் கவிகளாயிருக்கலாம்; ஆனால் கவிச் சக்கரவர்த்தி கம்பன் தான் என்று சிலர் சொல்லுகிறார்கள். கவிதை எவ்வளவு புரட்சிகரமாயிருந்தபோதிலும், கவிதை காலத்தை படம் பிடித்துக் காட்டும் கருவியாக இருந்தபோதிலும், அவைகளை இயற்றியவர்களைக் கவிச் சக்கரவர்த்தி என்று சொல்லமாட்டார்கள். அவர்கள் போற்றுகின்ற கவியிடம் (நாமக்கல் கவியுடன்) உள்ளகட்சிக் கொள்கைகள் தெரியா. அந்தக் கவியுடன் போட்டியிடக் கூடிய புரட்சிக் கவியிடம் (பாரதிதாசன்) உள்ள, காலத்துக்கேற்ற கருத்துக்கள் கட்சிக், கொள்கைகளாகத் தெரியும். உடனே, இந்தக் கவியைக் கட்சிக்கவி, கற்பனாசக்தியைக் குறிப்பிட்ட கொள்கைக்காகப் பாழ்படுத்திவிடுகிறவர், என்று பொது மக்களுக்கு அறிமுகப் படுத்திவிடுவார்கள். அறிவிழந்த மக்கள் அதை நம்பிக் கவிதைகளைக் கைவிடுவார்கள்.

காரணம் இல்லாமல் இல்லை

ஏன் புரட்சிக் கவியைப் புத்துலகச் சிற்பியாக மக்கள் முன் கொண்டுவந்து நிறுத்துவதில்லை யென்றால், அவருடைய புதுமைக் கருத்துக்களைக் காணும்படி மக்களைத் தூண்டுவதில்லை யென்றால் காரணமில்லாமலில்லை. மக்கள் புரட்சிக்கவியின் உண்மை உருவத்தைப் பார்த்துவிட்டால், அவர்களால் தூக்கி வைக்கப்பட்ட கவிகள் தொப்பென்று கீழே விழுந்து விடுவார்கள். கலிகளுக்கு மதிப்புக் குறையும்; போற்றினவர்கள் பிழைப்பும் கெடும். இளங்கோவைப்பற்றி மக்கள் அறிய ஆரம்பித்துவிட்டால், ‘சிலம்பு’ நாட்டிலே ஒலிக்க ஆரம்பித்துவிட்டால், கம்பனுக்கும் கம்ப ராமா-