14
ஏ, தாழ்ந்த தமிழகமே!
யணத்துக்கும் அவ்வளவு மதிப்பு இராது. மேன்செஸ்டர், கிளாஸ்கோ முதலிய இடங்களிலிருந்து மெல்லிய துணிகள் வருகின்றன என்றால், லாங்கிளாத்துக்கு அவ்வளவு கிராக்கி இருக்காது என்பது மட்டுமல்ல; சேலம் ஆறு - ஏழு முழ வேட்டிகளுக்கும் மதிப்பு இருக்காது. ஆமாதாபாத் புடவைகள் அமோகமாகக் கிடைக்கின்றன என்றால். ஆரணங்குகள் பெங்களூர்ப் புடவையை எப்படி விரும்புவர்? கம்பனைப்பற்றி நான் குறை கூறுவதாக நினைக்கக்கூடாது. உங்களிடமுள்ள குறைகளை நிவர்த்தி செய்து கொள்ள வேண்டும். ஒரு சிவரைப் போற்றுவதன் மூலம்தான் புகழடைய முடியும்; நமது புலமை மிளிரும் என்ற நினைப்பு ஒழியவேண்டும்.
பாண்டியன் பரிசு
இந்த முறையில் பாரகிதாசனின் பாண்டியன் பரிசு குறையைப் போக்குவதாக இருக்கிறது. பாண்டியன் பரிசு, சங்ககால இலக்கியங்களிலுள்ள உவமைகளையும், அணிகளையும், எளிய நடையில் எல்லோரும் புரிந்து கொள்ளுமாறு இயற்றப்பட்டிருப்பதைக் காணலாம். பாடலுக்கு லட்சணம் படித்தவுடன் இலேசில் புரிந்து கொள்ளக்கூடாது என்றும், புலமைக்கு லட்சணம் பிறர் கண்டு பயப்பட வேண்டும் என்றும் கருதுகிறார்கள். பாரதிதாசனின் காவியத்தைப் பார்க்க, படித்து உணர இலக்கணம் தேவையில்லை; இலக்கியங்களைப் படித்திருக்க வேண்டுவதில்லை; நிகண்டு தேவையில்லை; பேராசிரியர்கள் உதவி தேவையில்லை. ஆனால் இதைப் புலவர்கள் சிலர் வெறுக்கின்றனர்; மறுக்கின்றனர்! எளிய நடையினை எழுதுவது ஓர் ஆற்றலா என்று; தம்மால் எழுத முடியாவிட்டாலும் ஏளனம் பண்ணுகின்றனர்!
புலவர்களுக்கே பழக்கம்
ஒருவர் எழுதின புத்தகத்திற்கு மறுப்போ, அல்லது அதில் ஏதாவது குறையோ காணாவிட்டால், சில புலவர்களுக்குத் தூக்கமே வராது. திருவிளையாடல் புராணத்திற்கு விளக்கவுரை என்று திரு. கலியாணசுந்தரனாரால் ஒரு புத்த-