பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

170

ஐங்குறுநூறு தெளிவுரை


எடுத்துக் கூறினாள்' என்பதாம், என்னும் பழைய உரைக்கருத்தும் கொள்க.

மாறா அன்பிலே கனிந்து வரும் இனிய சொற்களாதலின், அதன் இனிமைக்குப் பாணர் மீட்டி எழுப்பும் யாழ்நரம்பிலிருந்தெழும் இசைநயத்தினை உவமிக்க என்ணி, அதுவும் செவ்வியால் பொருந்தாமை கண்டு, 'அதனினும் இனிய சொல்லினள்' என்றனன்.

இவ்வாறு, மருதத்திணையின் நுட்பங்களை எல்லாம் உணரக் காட்டுவனவாக அமைந்த, ஓரம்போகியாரின் செய்யுட்கள் நூறும் அறிந்தனம். இந் நூறு பாட்டுகளையும் பத்துக் குறுந்தலைப்புகளின்கீழ், அவ்வத் தலைப்புகளோடு இசைந்துவரத் தொகுத்திருக்கும் சிறப்பினையும் கண்டோம்.

மருதம் நாகரிகச் செவ்வியாலே சிறப்பது. மன உணர்வுகள் கலைநயத்தோடு செயற்படுத்தப்படும் விரைவிலே, கடமையுணர்வுகள் வலுவற்றுப் பின் தங்கிப் போதலும் நிகழ்கின்றன. இந்த இழுக்கத்தின் விளைவே பரத்தைமையும் பிறவுமாகும். இவ்வாறு இலக்கியத்திலேயும் ஏறுதல் பெற்ற இழுக்கம் பரவலான மக்கட்பண்பு என்பது தவறு. துறைநயம் காட்டலின் பொருட்டாகப் புலமையாளர் கற்பித்துக் கொண்டனவும் பல என்னும் நினைவோடேயே இதனைக் கற்று இன்புறல் வேண்டும். மனைத்தலைவியின் வருத்தத்தை மிகுவிப்பது, மணந்தானின் பரத்தைமைப் பிரிவே எனினும், அதனையும் தன் பெருந்தகையால் அடக்கிக்கொண்டு, குடிமாண்பு போற்றும் பெண்மைச்சால்பினை வியந்து காட்டலே நோக்கமாகப், புலவர்கள் பலப்பல நிகழ்ச்சிகளைப் படைத்துக் காட்டியுள்ளனர். இதுவே நிலையாகும் அன்றிக்

கட்டவிழ்ந்த காமத்தளர்ச்சியர் பண்டைத் தமிழரெனக் கொள்ளல் கூடவே கூடாது. அது தமிழ்ப் பண்பும் அன்று; மரபும் அன்று.