பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/203

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



202

ஐங்குறுநூறு தெளிவுரை


மேற்கோள்: காம மிக்கவழித் தலைவி கூறுதல் என இச்செய்யுளை இளம்பூரணர் எடுத்துக் காட்டுவர் - (தொல், களவு, 21).

118. பின் நினைந்து பெயர்ந்தேன்!

துறை : சிறைப்புறமாகத் தலைமகள் தோழிக்குச் சொல்லியது: தோழி வாயின் மறுத்த தலைமகள், பின்பு தலைமகன் வந்துழி நிகழ்ந்ததனை அவட்குக் கூறியதூஉமாம்.

[து. வி. : தலைவன் வரையாது. களவே மேற்கொள்ளலால் வருந்தித் தோழி வாயின் மறுத்தனள். மறுநாளும் தலைமகன் வரத், தலைமகள், தோழி தடுக்கவும் நில்லாதே அவன்பாற் சென்றனள். பின், அவள் வந்து, தோழிக்குச் சமாதானம் சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

அம்ம வாழி தோழி! யானின்று
அறனி லாளற் கண்ட பொழுதில்,
சினவுவென் தகைக்குவென் சென்ற னென்,

பின்நினைந் திரங்கிப் பெயர்தந் தேனே!

. தெளிவுரை : தோழி வாழ்வாயாக! இதனைக் கேட்பாயாக. இன்று, அறனில்லாதவனாகிய தலைவனைக் கண்ட பொழுதிலே 'அவன்பாற் சினங்கொள்வேன்; இனி அவன் இவண் வராதிருக்க என்று அவன் வரவையும் தடுப்பேன்' என்றே நினைத்துச் சென்றேன். பின்னர், அது செய்தலால் பெருந்துயரமாம் என்று இரக்கமுற்றவளாய், யாதும் அவன்பாற் சொல்லாதேயே மீண்டேன்!

கருத்து: 'அவனை மறத்தல் நமக்கும் இயல்வதில்லையே’ என்றதாம். . சொற்பொருள் : அறனிலாளன் - அறமே அறியாதவன்; தலைவனைச் சுட்டியது; அறமாவது களவிற் கலந்தாளை அலராகா முன்பே மணங்கொண்டு, இல்லத் தலைவியாக்கிக் கொள்வது. தகைக்குவேன் - தகைப்பேன் என்று எண்ணி; தகைத்தல் அவன் வரவை மறுத்தல். பின் நினைந்து - பின் விளைவை நினைந்து.

விளக்கம் : 'பின் நினைந்து இரங்கிப் பெயர்தந்தேன்' என்றது, ’அவளை வெறுத்து ஒதுக்கின், உயிர் வாழாமையே நம்முடைய நிலையாதலின், அவனை வெறுக்கவும் தடுக்கவும்