பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/216

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

215


அருள்மறந்த அவரை யாம் அடைதலை இனியும் விரும்பேம் என்றதாம். மேலாகப் புன்னை அரும்பால் மலியினும், உண்மையிற் கானலே இவ்வூர்; அவ்வாறே பேச்சில் நயமுடையராயினும், உளத்தே நயமற்றார் காதலர் என்றதுமாம்.

133. புல்லென்றன தோள்!

துறை: வாயிலாய்ப் புகுந்த பாணன், தலைமகள் தோள் மெலிவு கண்டு, "மனைப்புறத்துப் போய் வந்த துணையானே நீ இவ்வாறு வேறு படுதல் தகர்து," என்றாற்கு, அவள் சொல்லியது.

[து. வி. தலைவனுக்குத் தூதாக வந்தவனான பாணன், தலைவியின் தோள்மெலிவைக் கண்டு, 'தலைவன் மனைப்புறத்துப் போய் வந்ததற்காக நீ இவ்வாறு வருந்தித் தோள்மெலிதல் தகாது' என்று கூறித் தேறுதல் கூறித் தெளிவிக்க முயல்கின்றான். அவனுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இது.]

யானெவன் செய்கோ, பாண! - ஆனாது
மெல்லம் புலம்பன் பிரிந்தெனப்

புல்லென் றனவென் புரிவளைத் தோளே!

தெளிவுரை : பாணனே! மெல்லிதான நெய்தல் நிலத்தானான் நம் தலைவன், என்னை மறந்தானாகிப் பிரிந்து போயினான் என்பதாக, என் முறுக்குண்ட வளைகளணிந்த தோள்கள் ஆற்றாதே. தாமே மெலிவுற்றனவே! யான் யாது செய்வேன்?

கருத்து: "அவன் பிரிவைத் தாங்காதேனான என்னையும் அவன் பிரிந்தானே" என்றதாம்.

சொற்பொருள்: மெல்லம் புலம்பன் - மென்னிலமாகிய நெய்தல் நிலத்தான்; நெய்தல் மென்னிலமாவது மணற்பாங்கே மிகுதியாகி, வன்மையற்று விளங்கலின். புரி - முறுக்கமைந்த. வளை- தோள்வளை.

விளக்கம் : தோள் மெலியச் செய்தானை இடித்துக் கூறித் திருத்த முயலாது, 'மெலிந்ததேன்' என்று மட்டும் இவண் வந்து கேட்கின்றனையோ?" என்று சொல்லி வாயில் மறுத்தனள் என்க. அப்படிப் பிரிதற்கு உதவியாக நின்றவனான