பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

229


எக்கர் ஞாழல் அரும்புமுதிர் அவிழிணர்
நறிய கமழும் துறைவற்கு

இனிய மன்ற - எம் மாமைக் கவினே.

தெளிவுரை: எக்கரிடத்து ஞாழலின் அரும்பு முதிர்ந்து மலர்ந்த பூங்கொத்துக்கள், நறுமணம் கமழ்கின்ற துறைவனுக்கு, என் மாமைக்கவின் இனிமையானதே காண்!

கருத்து 'அவன் என்னை விரும்புவோனே' என்பதாம்.

விளக்கம் : ஞாழல் அரும்பு மலர்ந்து மணம் வீசும் துறைவன் ஆதலின், அவன் மனமும் நம்மை மணந்து கொள்வதை மறந்திலது என்கின்றனள்.

உள்ளுறை: ஞாழல் அரும்பு முதிர்ந்து அவிழ் இணர் நறிய கமழுமாறுபோல, அவன் அன்பும் முறையாக நிரம்பி வெளிப்பட்டு, இப்போது மணமாகவும் உறுதிப்பட்டது என்பதாம். அரும்பு முதிர்ந்து அவிழ்ந்த இணர் நறுமணத்தைத் துறையிடமெல்லாம் பரப்பல்போல, அவன் முயற்சி நிறைவுற்று மணம் வாய்த்தலால், அனைவரும் மகிழ்வெய்தினம் என்பதுமாம்.

147. நாடே நல்கினன்!

துறை; சுற்றத்தார் வேண்டிய கொடுத்துத் தலைமகன் வரைவு மாட்சிமைப் படுத்தமை அறிந்த தோழி, உவந்த உள்ளத்தளாய்த் தலைமகட்குச் சொல்லியது.

[து. வி.: தலைமகன் தன் காதலியின் பெற்றோரை வரைவொடு வந்து சான்றோருடன் அணுகுகின்றான். பெற்றோரும் உவந்து வரவேற்று அவளை மணத்தால் தருவதாயின், இன்னின்ன எல்லாம் வரைபொருளாகத் தருதல் வேண்டும் என்கின்றனர். அவற்றை அளித்து, அதன்மேலும் தந்து அவரை மகிழ்விக்க, அவர்கள் அவன் மாட்சிபோற்றி உவகையோடு இசைகின்றனர். இதனைக் கண்ட தோழி, உள் வீட்டில் இருக்கும் தலைவியிடம் சென்று, உவகை ததும்பக் கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

எக்கர் ஞாழல் மலரின் மகளிர்
ஒண்தழை அயரும் துறைவன்

தண் தழை விலையென நல்கினன் நாடே,