பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நெய்தல்

259


168. பால் ஆரும்மே!

துறை : நொதுமலர் வரைவுவேண்டி விடுத்தமை அறிந்து தலைமகள், ஆற்றாளாய்ப் பசியட நிற்புழி, இதற்குக் காரணம் என்னென்று செவிலி வினவத், தோழி அறத்தொடு நின்றது.

[து. வி: தலைவி களவுறவிலே ஒருவனை வரித்து அவனுடன் மனங்கலந்துவிட்டாள். அஃதறியாத சுற்றத்தார், அவளை வரைவுவேண்டிப் பெரியோரைத் தமர்பால் விடுக்கின்றனர். 'பெற்றோர் அவருக்கு இசைவர் போலும்' என்று ஆற்றாமை மீதூர்ந்தாளான தலைவி, உணவும் மறுத்து வாடி நிற்கின்றாள். 'அஃதேன்" என் று செவிலித்தாய் கேட்பத் தோழி சொல்லி அறத்தொடு நிற்பதாக அமைந்த செய்யுள் இது.]

பெருங்கடற் கரையது சிறுவெண் காக்கை
துறைபடி யம்பி யகமணை ஈனும்
தண்ணந் துறைவன் நல்கின்

ஓண்ணுதல் அரிவை பாலா ரும்மே!

தெளிவுரை : பெரிய கடற்கரையின் கண்ணதான் சிறுவெண் காக்கையானது, துறையிடத்தே கிடக்கும் தோணியின் அகத்தே கூடுகட்டிக்கொண்டு முட்டையிடும். அத்தகைய குளிர்ந்த துறைக்கு உரியவனான தலைவன் வந்து நல்குவானாயின், ஒளிகொண்ட நெற்றியினளான இவளும் பாலுண்டு பசி தீர்வாள்!

கருத்து: 'அவனுக்கே ஏங்குபவள் இவள்' என்றதாம்.

சொற்பொருள்: அகமணை - உட்கட்டைக்குள்; படகு வலிப்பார் அமர்தற்காகக் குறுக்குவாட்டமாக அமைக்கப்பெற்றிருக்கும் இருக்கைக் கட்டை; இதனடியிலே காக்கை கூடுகட்டி முட்டையிடும் என்பது கருத்து. நங்கின் - வந்து வரைந்து மணப்பின். பால் ஆரும் - பால் உண்ணும். நொது மலர் - அயலார். பசியடநிற்றல் - பசியானது வருத்தவும் உண்ணாதே வருந்தி நிற்றல்.

விளக்கம்: 'துறைபடி யம்பி' என்பதனைப் புதுப்படகு கொண்டார் கழித்துப்போடக் கரையிடத்தேயே கிடக்கும் பழம் படகெனக் கொள்க. பசிவருத்தவும் உண்ணாதிருத்தல் புணர்ச்சி நிமித்தமான மெய்ப்பாடுகளுள் ஒன்று என்பது தொல்காப்பியம் - (மெய்ப் 22). உணவு மறுத்தாளைப் பாலாவது