பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


காதலின் மிக்கராய்க் கற்றவர் தமையெலாம்
கூட்டிச் சான்றோர் செயுளெலாந் தொகுத்தே
நாட்டித் தொகைநூல் நன்கனம் காண்கெனச்
சங்கம் அமைத்தனர்! தமிழ்வளம் போற்றினர்!
பொங்கும் புலமையர் புகல்தமிழ்ச் செயுளெலாம்
அங்கண் தோய்ந்துதோய்ந் தறிவோர் போற்றத்
தங்கொளி சேர்தமிழ் தாமெனத் தழைத்தவே!

அவைதாம்,

முட்டா நலத்தின் முதிர்சுவைத் தேறலாம்
எட்டாம் தொகைநூல் இன்பதின் பாட்டொடே
காலமும் கருத்தும் கவர்ந்தெழில் பரப்பி
ஞாலமே போற்றும் நற்சங்கத் தமிழாம்!

எட்டுத் தொகையெனும் இன்தமிழ்க் கடலுள்
கட்டிக் கரும்பிவ் வைங்குறு நூறாம்!
ஒவ்வொரு திணைக்கும் ஒருநூறு செய்யுளாய்
ஒவ்வொரு சான்றோர் உரைத்ததிந் நூலாம்!
இதனுடைத் தோற்றம் ஈதென உரைக்கும்
அதனையும் ஈங்கே அறிதல்நம் கடனாம்!

அந்நாள்,

மாந்தரஞ் சேரலாம் மன்னவர் பெருமான்
தான்தமிழ் மரபெனத் தருக்கிடும் கோமான்
கூடலூர் கிழாரெனும் குறையிலாப் புலவரை
நாடியே நற்றமிழ்ப் பாக்கடல் தேடி
ஐந்திணை ஒழுக்கமும் அமைவுறக் காட்டிச்
செந்தமிழ் நலத்தின் செழுமையே செப்பும்
அடியதன் அளவிற் குறுகிய அமைப்பால்
முடிந்திடு தொகைநூல் முடிக்கநீர் என்றனன்!

அவரும்,

ஐம்பெரும் திணைப்பா அருமையின் ஆக்கும்
செந்தமிழ்ச் சான்றோர் சிலரைமுன் கூட்டி