பக்கம்:ஐங்குறுநூறு-மருதமும் நெய்தலும்.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



88

ஐங்குறுநூறு தெளிவுரை


கூதிர் ஆயின் தண்கலிழ் தந்து,
வேனில் ஆயின் மணிநிறம் கொள்ளும்
யாறு அணிந்தன்று, கின் ஊரே;

பசப்பு அணிந்தனவால்--மகிழ்நl--என் கண்ணே.

தெளிவுரை : தலைவனே! கூதிரிக்காலத்திலே தண்மையோடு கலங்கிய நீராய் விளங்கியும், வேனிற்காலத்திலே நீலமணியின் நிறத்தினைக் கொண்டும் விளங்கும் ஆற்றினாலே ஊரானது அழகுபெற்றது. என் கண்களோ, எஞ்ஞான்றும் நீ இழைத்த கொடுமையால் பசலைநோயே பெற்றன!

கருத்து : கண்ணுெளி கெட்டுக் கலங்கியவ ளாயினேன் என்பதாம்.

சொற்பொருள் : கூதிர் - ஐப்பசி கார்த்திகை மாதங்கள். வேனில் வைகாசி ஆனி மாதங்கள். முன்னது மழைக்காலம்; பின்னது கோடைக் காலம். மழைக்காலப் புதுவரவால் நீர் கலங்கலாகத் தோன்றும்; வேனிலிற் புதுவரவற்றமையால் தெளிந்து நீலமணி போலத் தோன்றும். அந்த ஆருல் அழகு பெற்றது நின் ஊர் என்பாள், ஆறு அணிந்தன்று என்றனள்.

விளக்கம் : கூடலும் பிரிதலும் என்று இல்லாமல், என்றும் பிரிதலே நின் செயலாதலால், இவள் கண்கள் பசலை நோய் உற்றுத் தம் அழகு கெட்டன. நின் ஊர் ஆற்றுக்குக் கலங்கலும் தெளிதலும் காலத்தான் உண்டு; எனக்கு எப்போதும் கலக்கமே என்பதாம். இதனைத் தலைவி கூற்றாகவும் கொள்ளலாம். }}

47. எமக்கும் இனிதே!

துறை: மனைக்கண் வருதல் பரத்தை விலக்க விலங்கி, பின்பு, உலகியல் பற்றி அவள் குறிப்பினோடும் வந்தமை அறிந்த தோழி, தலைமைகனைப் புலந்து சொல்லியது.

[து. வி. : மனைநோக்கி வர நினைந்தாலும், பரத்தை அதனைத் தடுத்துக் கூறுதலாலே வராது நின்ருன் தலைவன். அவன், பின்பொருநாள், உலகியல்பற்றி அவள் (பரத்தை) நினைவோடும் வீடு வந்தனன்; அப்போது அவனைச் சினந்து தோழி சொல்லியதாக அமைந்தது இது.]