பக்கம்:ஐங்குறு நூறு-மூலமும், உரையும்.pdf/224

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மருதம் 8. புனலாட்டுப்பத்து. புனலாடுதல் பொருளாகப் பி ற ந் த கூற்றுக்களைக் குறித்து வரும் பாட்டுக்களின் தொகையாதல்பற்றி, இஃது இப் பெயர் பெஅவதாயிற்று. பண்டைக்காலத்துத் தமிழ் ம க் கள் வாழ்க்கையில் நிகழ்ந்த விளையாட்டுவகைகளில், புனலாட்டு எ ன் ப து ஒன்று. இது பெரும்பாலும் வேனிற்காலத்து கிகழ்வ தொன்று. ஏனேப் பருவங்களில், யாறுகள் புது நீர் பெருகிப் பொலிவுற்றுத் திகழும் சிறப்புக்குறித்துப் புன லாட் டயர்தலும் பண்டையோர் மரபு. குறிஞ்சி முதலிய கிலத்துமக்கள், முறையே சுனையும் அருவியும், யாறும், குன்மும் என்ற நீர்நிலைகளில் நீர் விளையாட் டர்வர். அண்ணல் கெடுங்கோட் டிழிதரு தெண்ணிர், அவிர்துகில் புரையும் அவ்வெள்ளருவித், தவிர் வில் வேட்கையேம் தண்ட காடிப், பளிங்குசொரி வன்ன பாய்சுனே குடைவுழி' குறிஞ்சி. 54-1) எனக் குறிஞ்சி நிலமக்கள் புனலாடியவாறு காண்க. இவ்வண்ணமே, மருத கிலமாந்தரும் உாறும் பொய்கையும் புக்குப் புனலாடுவர். புனலாட்டின்கண், செல்வரும் வறியரும், இளையரும் ~, முசியரும், ஆண்மக்களும் பெண்மக்களும் ஒத்த வ்கையாற் கூடிப் புனலாடி இன்பம் துய்க்கும் எண்மை யுடைய தாக லின், சான்குே இதனைச் சிறப்பக் கூறி யிருக்கின்றனர். செல்வச்சிறப்பு மிக்க தலைமக்கள். புனலாட்டினேப் பெரிதும் விரும்பித் தம் மனக்கினிய காதலர்சூழச் சென்று விளையாடி இன்பம் நுகர்வர். இளையோர், இவ்வாறு புனலாடி இன்பம் நகர்தலின்றித் தம் மனையின்கண் சேறிப்புண் டிருத்தல் தீது, என்றும் பண்டைத் தமிழ்ச்சான்மூேர் கருதியிருந்தனர்.