பக்கம்:ஐந்திணை வளம்.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114 - ஐந்திணை வளம் கண்டு, அதனைத் திரும்பவும் மீட்டுத் தருதல் வேண்டு மென்பதும் தோன்றுகின்றது. தலைவியை அண்மி, அவளுக்கு உரைப்பவளாகத் தன் கருத்தைச் சொல்லுகின்றாள்,தோழி! “என் தோழியே!” 'நுண்மையான கயிறுகளாற் பின்னப்பெற்ற வலையினாலே, பரதவர்கள் பிடித்துக் கொணர்ந்த பலவகை மீன்களின் உணங்கலைப் பறவையினம் கவர்ந்து செல்லுகின்ற தன்மையினையுடையதுறையிடத்திற்கு உரியவன் நம் தலைவன்: 'அவனை நம் கண்ணினால் காண்பதற்கு இனிநேருமோ? அங்ங்னம் நேருமானால், அவனை விடாது தொடர்ந்து, நீ களவுப் புணர்ச்சியாற் கைக்கொண்டு சென்று எம் கன்னிமை அழகினைத் தந்துவிட்டுப் போவாயாக என்று சொல்லி நாம் அவனிடம் கேட்போம். - அவனை மேலும் பிரியவிடாது பற்றிக் கொள்வோம் என்பது தோழியின் கருத்தாதலைத் தலைவி உணர்கின்றாள். 'அவனை எப்போது நாம் காண்போமோ? என்கின்றாள். அவள் துயரம்மேலும் ஓங்கிப்படர்கின்றது. நுண்ஞாண் வலையிற் பரதவர் போத்தந்த பன்மீன் உணங்கல் கவருந் துறைவனைக் கண்ணினாற் காண வமையுங்கொல், என்தோழி! வண்ணந்தா வென்கந் தொடுத்து. ‘பரதவர்க்கு உரிமையான மீனுணங்கலைப் பறவைகள் கவர்ந்து செல்லுகின்ற துறைக்குரிய தலைவன்’ என்று சொல்வாளாக, அவன் தலையிவின் கன்னிமையழகைக் கவர்ந்து சென்ற களவுத் தன்மையினைச் சுட்டினள். மீனுணங்கலைக் கவரும் பறவைபோல, அதனைக் காத்திருந்த அவள் நலத்தினைத் தலைவன் கவர்ந்தான் என்று கூறிப்பழித்ததாகவும் கொள்க. "வண்ணந்தா என்கம்’ என அவன் வரின், அவனோடு இன்புற்றிருத்தலைவிட்டு ஊடிநிற்பேம் என உரைத்தலையும் அறிக. பரதவர்கள் பெருமுயற்சியோடு கடலிடைச் சென்று மீன்களைக் கொண்டு வாகவர்: அவற்றைத் தமக்க உதவுமாறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/122&oldid=761804" இலிருந்து மீள்விக்கப்பட்டது