பக்கம்:ஐந்திணை வளம்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் - - s 33 14. வாரல் என்பது உரை தலைவன், தன்னுடைய காமத்தின் மிகுதிகாரணமாக இரவிடைக் காட்டினூடே வழிநடந்து, தலைவியைச் சந்திக்குமாறு வருகின்ற வழக்கத்தை மேற்கொள்ளுகின்றான். தலைவியும் அவனைப் பெற்றுக் கூடி இன்புறுதலை விரும்புபவள் என்றாலும், அவன் வருகின்ற வழியிடையே ஏற்படக்கூடிய துன்பங்களை எண்ணியதும், அவள் உள்ளம் சோர்வடைகின்றது. தன் தோழியிடம், அவனை இரவில் வரவேண்டாம் என்று சொல்வாயாக என்று வேண்டுகின்றாள். தலைவனின் நலத்திலே ஈடுபாடுகொண்டவள் அவள். அதனால், அவனுக்கு ஊறு ஏற்படுமென நினைத்ததும் அவளுடைய இன்பநாட்டம் கரைகின்றது. அவன் தீங்கற்று விளங்குதலையே விரும்பும் கற்புமேம்பூாடுசிறக்கின்றது. 'தோழி! நின்னால் முடிக்கப்பட வேண்டிய செயல் ஒன்று என்னிடத்தே உள்ளது. நிறையிழந்த செறிந்த ஓர் உயிருக்கு இப்போதே சென்று பாதுகாத்தலுக்கு வேண்டியவற்றைச்செய்தல் வேண்டும். அது என்ன தெரியுமா? ‘தெரியாது’ என்று தோழி சொல்லத் தலைவி மேற்கொண்டுசொல்லுகின்றாள். வேறொன்றும் இல்லை. பாம்புகள் நடமாடும் நெடிய சோலைகளை உடைய நாடனாகிய நம் தலைவன்பாற் செல்க சென்று,நம் வீட்டுப்புறத்தே இரவுப்போதில் வருதல் வேண்டா என்பதனைச் சொல்வாயாக’ என்று முடிக்கின்றாள். குறையொன்று உடையேன்மற் தோழி! நிறையில்லா மன்னுயிர்க்கு ஏமஞ் செயல்வேண்டும் இன்னே அராவழங்கு நீள்சோலை நாடனை நம்மில் இராவரல் என்பது உரை. இதனால், தலைவியைப்பிரிந்திருக்க ஒண்ணாத தலைவன், விரைந்துவந்து மணந்து கொள்வதற்கு முயல்வான் என்பதும் தெளிவாகும். இங்ங்னமாக நிகழும் குறிஞ்சித்திணையது சார்பான ஒழுக்கங்கள், தலைவன் தலைவி தோழி ஆகியோரிடையே,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/41&oldid=761842" இலிருந்து மீள்விக்கப்பட்டது