பக்கம்:ஐந்திணை வளம்.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 - ஐந்திணை வளம் 'இவற்றுடன் ஆறலைகள்வர்கள் திரிந்துகொண்டிருக் கும் கொடிதான பாலைநிலம்.அதுவெனவும் கூறுவார்களே! 'இதனால் அவர் செல்ல நினைத்தாலும், அவ்வழியினை அணுகியதும், தம் எண்ணத்தை மாற்றிக் கொண்டு, மீளவும் நம்பால் திரும்பி வந்து விடுவார். அந்த எண்ணத்தால் நானும் கவலையினைச் சிறிதுமறந்திருக்கின்றேன். நீநினைப்பதுபோல் எனக்கொரு இடர்ப்பாடும்வந்துவிடாது' என்கின்றாள்.தலைவி. தலைவியின் இந்த உரை, தோழியின் கவலையைக் குறைக்கின்றது. எனினும் அவள், தன்னைக் கவலைப் படாதிருக்கச் செய்வதற்கே,தலைவி தன்வருத்தத்தைமறைத்துக் கூறுகின்றாள் என்பதனையும் உணர்கின்றாள். உணர்ந்து, தன் மனத்துள்ளே மயக்கங்கொள்ளவும் தொடங்குகின்றாள். முள்ளுடை மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை புள்ளி வெருகுதன் குட்டிக் கிரைபார்க்கும் கள்ளர் வழங்குஞ் சுரமென்பர் காதலர் உள்ளம் படர்ந்த நெறி. 'முள்ளுடைய மூங்கில் பிணங்கிய சூழ்படப்பை எனவே, அதுஎளிதாகக்கடந்துசெல்லுதற்கு இயலாதவழியென்பதனையும் கூறினாள் புள்ளி வெருகுதன் குட்டிக்கு இரைபார்க்கும் கள்ளர் வழங்கும் சுரம் என, அவ்வெருகினைப்போலவழிச்செல்வோரை எதிர்பார்த்திருக்கும்கள்.வர்திரிகின்றகொடுமையினைக்கூறினாள். இதனால், தலைவர் மீளவும் திரும்பி விடுதல் கூடுமென்பது தலைவியின் கருத்தாகும். 9. கண்ணுள் நீர் நில்லா தலைவன் ஒருவனின் உள்ளம்,பொருள்தேடிவருதலின் பொருட்டாக வெளிநாடு போய்வருதலிலே ஈடுபடுகின்றது. நாளுக்குநாள் இந்த எண்ணம் வலுப்பெறுகிறது. அவன் உள்ளம், தலைவி அதனைக் கேட்பின் கொள்ளும் துயரினை நினையாமலும் இல்லை. தான் பிரிந்து நோயினால் அவள் பெரிதான துன்பத்தினளாகி உள்ளமும் உடலும் சோர்ந்துபோகத் தளர்ச்சி மிகுந்தவளாகி விடுதலை, அவன் அறிவான். இதனால், தலைவியிடம் தானே சொல்லுதற்குரிய துணிவும் அவன்பால் பிறக்கவில்லை. அவன் சொல்லவும் மாட்டாது, மறைக்கவும் இயலாமற் கலங்கியிருந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/72&oldid=761876" இலிருந்து மீள்விக்கப்பட்டது