பக்கம்:ஐந்திணை வளம்.pdf/71

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 63 சூரற் புறவின் அணில்பிளிற்றும் சூழ்படப்பை ஊர்கெழு சேவல் இதலோடு-போர்திளைக்கும் தேர்ஓடு கானந் தெருளிலார் செல்வார்கொல் ஊர்இடு கவ்வை யொழித்து? - செய்யுளின் அமைதி, தலைவியின் உள்ளத்தின்கண் நிரம்பிநிற்கும் ஏக்கமிகுதியை மிகவும் தெளிவாகவே நமக்கு உணர்த்துகின்றது. * சூரல்-பிரம்பு, புறவுகாடு, இதல்-காடை,தேர்பேய்த்தேர், தெருள்-தெளிவு, படப்பை-கொல்லை; தோட்டம், கவ்வைபழியால் எழுகின்ற ஆரவாரம். 8. கள்ளர் வழங்கும் சுரம் தலைவியின் மனநிலையைக் கண்டதோழியின் உள்ளம் பெரிதும் துயர்க்கடலுள் ஆழ்கின்றது. சொல்வதறியாதும் செய்வதறியாதும் அவள் சோர்கின்றாள். முடிவில், அவள் உள்ளம் தலைவியின் ஆற்றாமை மிகுதியை நினைந்து வருந்துகின்றது. 'அவர் பிரிவினை எப்படித்தான் நீ பொறுத்துக் கொண்டு அவர் மீண்டும் வரும்வரை ஆற்றியிருக்கப் போகின்றாயோ? அதுதான் எனக்கு இப்பொழுது பெருங் கவலையாக இருக்கிறது என்கிறாள் தோழி. தோழி அப்படிக் கேட்டதும், தலைவியின் பண்பு மேலோங்குகின்றது. தன் ஆற்றாமையையும் மறைந்தவளாகத், தன்னால் அந்தப் பிரிவையும் ஆற்றியிருத்தற்கு இயலும் என்று கூறுவதற்கு முற்படுகின்றாள். 'தோழி! 'நம் காதலரின் உள்ளமானது போவதற்குக் குறித்த வழியினது தன்மையினைச் சென்றறிந்தார் சொல்ல யாமும் கேட்டுள்ளோம் அல்லவோ? 'முட்களையுடைய மூங்கிற் புதர்கள் சூழவும் பின்னிக் கிடக்கும் பகுதி அது என்பார்களே? அவ்விடத்தே புள்ளிகளையுடைய காட்டுப் பூனையானது, தன் குட்டிக்கு உணவைத் தேடித் திரிந்து கொண்டிருக்கும்’ எனவும் உரைப்பார்களே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/71&oldid=761875" இலிருந்து மீள்விக்கப்பட்டது