பக்கம்:ஐந்திணை வளம்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62 - ஐந்திணை வளம் 'ஏனடி! அவர் சென்றுவிட்டார் என்பது நடந்து விட்டது. இனி, அவர் செல்லும் வழியினது ஏதத்தையே நினைத்துப் புலம்பிச் சோர்வினைக் கொள்வதனால் பயன் யாது? செல்லும் அவர், எவ்வித இடையூறும் அற்றவராகி இனிதே கடந்து போவாராக என்று விரும்புவதுதான் முறை. ஆகவே, அதன்பால் நின் நினைவினைச் செலுத்தி அமைக’ என்று, தலைவிக்குத்தேறுதல் கூறித் தெளிவிக்க முயல்கின்றாள் தோழி. & 'தோழி! அவர் இப்போதெல்லாம் நன்மை தீமைகளைப் பகுத்தறிந்து ஒரு முடிவுக்கு வருவதற்குரிய தெளிவினையே இல்லாதவராகப் போய்விட்டார்; அதுதான் என் மனம் பெரிதும் வருந்துகின்றது என்கின்றாள். 'அவர் தெளிவற்றவர் என்று எதற்காகக் கூறுகின்றாய்? நாட்டிலுள்ளாரான ஆடவர் பலரும் மேற்கொள்ளும் செயல்ைத்தானே அவரும் செய்கின்றார். அவரை ஏனடி பழிக்கின்றாய்? என்கிறாள் தோழி. - 'இதோ என்நிலைமையைப் பாரடி ஊரிலுள்ள பலரும் என்னைக் கைவிட்டுச் சென்ற அவரது கொடுஞ்செயலைக் குறித்துப் பழிப்பதையும் அறிவாய் அல்லவோ இவை எல்லாம் என்னோடு அமைவனவாக என நீக்கி விட்டு, இவற்றைப் பற்றி எவ்விதக் கவலையும் இல்லாதே, அவர் போயினது முறையோ? அதுதான் அறிவிலே தெளிவுடையார் செய்வதோ? தலைவியின் பேச்சிலேஏக்கமும்பிரிவின்வெம்மையும்இழைந்து வெளிவரக்கண்டதோழி, எதுவும் சொல்வதற்கு இயலாதவளாக அமைகின்றாள். தலைவியே.மீண்டும்பேசுகின்றாள். 'பிரப்பம் புதர்கள் மிகுந்தது காட்டு வழி. அவ்விடத்தே அணிற்பிள்ளைகள் ஒலித்துக் கொண்டிருக்கும் கொல்லைகளாற் சூழப்பெற்ற ஊர்கள் இருக்கும், அவ்விடத்தே பொருந்தியுள்ள சேவலானது காடைப் பறவையுடனே சண்டையிட்டபடியே இருக்கும் எனவும் சொல்வார்கள். ‘அத்தகைய கானத்தின் வழியாகப் படர்ந்து செல்லும் பேய்த்தேரின் துணையோடு இவரும் செல்லுபவர் ஆவாரோ? என்று சொல்லி, மேலும் கவலைக் கடலுள் ஆழ்கின்றாள் தலைவி. .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/70&oldid=761874" இலிருந்து மீள்விக்கப்பட்டது