பக்கம்:ஐந்திணை வளம்.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 83 வெறுத்த அவன்பால் சினங்கொண்டு ஊடியும், தன் தன்மையை நினைந்து வருந்திவாடியும் நாட்களைக் கழித்து வந்தாள். தாய்மைப்பேற்றின் தளர்வு நீங்கி மீளவும் தலைவிபால் அழகுநலம் கொழுமையுற்று இலங்கக்கண்டதலைவனின் மனம், மீளவும் அவளுடைய கூட்டத்தைநாடிச்சென்றது. தன்னுடைய பரத்தைமை ஒழுக்கத்தினாலே தலைவி தன்னோடு ஊடியிருக்கின்றாள் என்பதனை அறிந்த அவன், அவள் ஊடலைத் தெளிவித்துக் கூடுதலையும் விரும்பினான். தன் ஏவலனாகிய பாணனை அழைத்து "பாண"யாம் எம் இல்லினை நாடிச் செல்லற்கு விழைகின்றோம். நீசென்று எம் தலைவிபால் இதனை அறிவித்து வருக எனக் கூறி ஏவுகின்றான். பாணனும், தலைவனின் @Tഖങ്ങ ഖ ஏற்றுக் கொண்டவனாகத் தலைவியின் இல்லத்தை நோக்கிச் சென்று தலைவனின் விருப்பத்தைச் சொல்லித் தலைவிபால் வேண்டி நிற்கின்றான். அப்போது தலைவி பாணனுக்குக் கூறுகின்ற சொற்களுள், அவளுடைய உள்ளத்தைக் கவிந்திருந்த ஏக்கமும், அவள்பால்மிக்கெழுந்து நிரம்பிவழிந்த ஊடற்சினமும் வெளித் தோன்றுகின்றன. உழலை முருக்கிய செந்நோக்கு எருமை பழனம் படிந்துசெய் மாந்தி--நிழல்வதியும் தண்துறை ஊரன் மலரன்ன மாற்புறப் பெண்டிர்க்கு உரைபாண உய்த்து. ‘பாணனே! சிவந்த கண்களையுடைய எருமைக் கடாவினைக் கண்டிருப்பாய். அது கட்டுமீறிப்பயிர்வயல்களுள் புகுந்து அழிவு செய்யும் எனக் கருதி, அதற்கு உரியவர்கள், அதன் கழுத்திலே உழலை மரத்தைக் கட்டி விட்டிருப்பர். ஆனால், அதுவோ, அந்த உழலை மரத்தை நாசப்படுத்திவிட்டுத் தன் போக்கிலேயே செல்லும் வயற்புறங்களின்பாற் புகுந்து சென்று கழனிகளில் விளங்கும் பசிய பயிரினை மேய்ந்த பின்னாக, மருதமரத்துநிழலிலேயும் தங்கியிருக்கும். 'இப்படிப்பட்ட தன்மையினையுடைய எருமைக்கடா வினைக் கொண்ட, குளிர்ந்த நீர்த்துறைகளைக் கொண்ட ஊருக்கு உரியவன் நம் தலைவன். ஆகவே, அவனும் என் வாழ்வை நாசப்படுத்திவிட்டுப்பரத்தையர்பாற் சிக்கிக் கிடந்து களிக்கின்றான்.'

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/91&oldid=761897" இலிருந்து மீள்விக்கப்பட்டது