பக்கம்:ஐந்திணை வளம்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82 ஐந்திணை வளம் 4. பெண்டிர்க்கு உரை ஒரு தலைவனும் தலைவியும் இன்பமான இல்லற நல்வாழ்விலே கூடித்திளைத்து வாழ்ந்து வந்தனர். இளமைப் பொலிவும் வளமைச் செறிவும் அவர்களின் இல்லத்தின்கண் இன்பகீதத்தை நிறைத்துக் கொண்டிருந்தன. கவலையின் சாயலோ, துயரத்தின் நினைவோ அவ்விடத்தே எழுமென்று எவரும் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்க்கவும் இயலாது. இந்த நிலையிலேதான் தலைவி நிறை கர்ப்பிணியாகத் தாய்மைப் பொலிவுடன் தளர்கின்றாள். அவளோடு கணமும் பிரியாதிருந்து பெண்மையின்பத்தின் மிகுதியிலே மூழ்கித் திளைத்த தலைவனின் உள்ளத்திலே, அவளது தாய்மைப் பேற்றினைக் கண்டதும் மகிழ்ச்சி கரைகடந்து பெருகி நின்றாலும், அத்துடன் பெண்மை இன்பத்தை நுகரவியலாத காரணத்தாலே கவலையும் தோன்றலாயிற்று. அவள்பால் பேரன்பும் பெருங்காதலும் கொண்டவன் அவன் என்றாலும், அவனுடைய உள்ளம் இன்பவேட்கையின் காரணமாகத் தளர்ச்சியுற்றுப் பிற நாட்டங்களிற் செல்லுதலையும் தொடங்கியது. அவனுடைய இந்த மனப்போக்கு, ஒரு நாள் கட்டிளமையுடன் கவினாலும் நிரம்பியிருந்த பரத்தை ஒருத்தியைக் கண்டதும் கட்டவிழ்ந்து அவளை நோக்கிச் செல்லவும் தொடங்கிற்று. தலைவனின் தகுதிப்பாடும் பிறவும் பரத்தையைக் கவர்ந்தன. இவனுடைய உறவினை அவள் ஆர்வமுடன் எதிரேற்று நின்றாள். இருவரும் கரைகடந்த இன்ப நுகர்விலே ஈடுபட்டனர். இதன் பயனாகத் தலைவன்,தன்மனையை மறந்து, பரத்தையின் வீடே கதியாகக் கிடந்த ஒரு நிலைமையும் உண்டாவதாயிற்று. தலைவியும், உரிய நாளிலே புதல்வனைப் பெற்று விட்டனள். அதனால், அவர்கள் வீட்டிலே மகிழ்ச்சி வெள்ளம் பெருக்கெடுத்துப் பரவியது.புதல்வனைப் பேணியும் ஊட்டியும் வருதலிலே சில காலம் தலைவியும் தன் வேதனையை மறந்திருந்தாள். எனினும், சில திங்கள் கழிந்ததும், அவள்பால் மீளவும் காமநினைவு கால் கொள்ளலாயிற்று. தலைவனின் பரத்தைமை உறவினை அறிந்த அவள் பதறினாள். தன்னை \

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/90&oldid=761896" இலிருந்து மீள்விக்கப்பட்டது