பக்கம்:ஐந்திணை வளம்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

புலியூர்க் கேசிகன் 91 தலைவியின் நம்பிக்கைக்குப் பாத்திரமான தோழியும் முதலில், தலைவனை அவனது ஒழுக்ககேட்டைக் குறிப்பிட்டுத் தானும் சினந்து வெறுத்துப் பேசுகின்றாள்; என்றாலும், தலைவியும் தலைவனும் இணைந்தே வாழ்வதற்குரிய இல்லற வாழ்வு சிறப்பெய்துதலைக் கருதினாளாக, அவனுக்காகத் தலைவிபால் தூதுரைக்கவும் இசைகின்றாள். இசைந்து வருபவள், தலைவிபால், நயமாகக் தவைனை ஏற்றுக்கொள்ளுமாறு உரைக்கவும்,நடந்ததை மறந்து விடுமாறு கேட்கவும் தொடங்குகின்றாள். "ஆண் பெண் உறவின் தன்மையானது, ஆழ்ந்த ஆராய்ச்சியிற் சிறந்த பெரியவர்கள் உலகிற்கு வகுத்துத்தந்துள்ள அன்போடுகூடி விளங்குவதாகும் என்று எண்ணாதவரான பரத்தையர்களுக்குக் காட்டி வந்த கண்ணோட்டத்தினை இன்றோடு முடித்துக் கொள்வோம்’ எனக் கருதி நின்பால் வழிபாடுசெய்தும் வேண்டிநிற்கின்றான்.” - "வளமான வயல்களையுடைய ஊரனான தலைவனை நீ இனியும் ஒதுக்குவாயானால்,இனி அவனுக்கு வந்துறும் குற்றப் பாடுகள் எல்லாம் நின் மேலதாகவே கொண்டு உரைக்கப்படும். ஆதலால், அவனை நீயும் ஏற்றுக்கொள்வாயாக' 'நீ ஏற்காது கைவிட்டால், அவன் மீளவும் பரத்தையர் சேரியிற் சுற்றலாம். அதனால் வந்துறும் இழிவும் நின்னையே வந்து சாரும் என்று எச்சரித்து, அதன் மூலம் குடிப்பழிக்கு அஞ்சியேனும் அவனை ஏற்றுக்கொள்ளுதலை வேண்டுகின்றாள் தோழி. உண்ணாட்டஞ் சான்றவர் தந்த நசையிற்றென்று எண்ணார்க்குக் கண்ணோட்டம் தீர்க்குதுமென்று - எண்ணி. வழிபாடு கொள்ளும் வளவயல் ஊரன் பழிபாடு நின்மேலது. ‘வழிபாடு கொள்ளும் வனவயல் ஊரன் என்று அவன் தன்னுடைய பெருநிலையை மறந்து பணிந்து வேண்டிநின்ற எளிமையினை நினைவுறுத்துகின்றாள்.'பழிபாடு நின் மேலது. என்று, அவனோடு ஊடிச் சினந்து கொள்ளும் ஒழுக்கத்தை நீட்டியாது, அவனை ஏற்றுக்கொள்ளுதலை வேண்டுகின்றாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐந்திணை_வளம்.pdf/99&oldid=761905" இலிருந்து மீள்விக்கப்பட்டது