பக்கம்:ஐந்து செல்வங்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
27


கண் : பாட்டி! நன்றாகத் தெரிகிறது. இனி ஐயம் இல்லை. இவையெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரிந்தது பாட்டி? நீங்கள் கல்லூரியில் படித்தீர்களா? என்ன?

பாட்டி : இல்லையம்மா! என் காலத்தில் கல்லூரி ஏது: பள்ளிப் படிப்பு இருந்தாலும், நல்வாழ்வு வாழ உலகத்தையும் படித்தாக வேண்டும் கண்ணு!

இச்சமயத்தில் வந்த,

செல்லம் : கண்ணம்மா! கிழடு என்ன உளறுகிறது? கிழத்தோடு சண்டையா, என்ன?

கண் : செல்லம்! வா! இனிமேல் பாட்டியைக் ‘கிழடு’ என்று கேலியாகப் பேசாதே! எப்போதும் மரியாதையாக பேசக் கற்றுக்கொள். கிழடுகள்தாம் நம் நாட்டின் உயர்ந்த செல்வங்கள்! அவர்களிடம் நிறைந்துள்ள அனுபவக் குவியல்கள் எதிர்காலக் கிழடுகளாகிய நமக்கு இப்போது தேவை. கிழட்டுச் செல்வங்களை இழந்தால் நாம் ஒரு நற்செல்வத்தை இழந்தவர்களாவோம்’ செல்லம்! நாம் இருவரும் நட்புடையவர்களாக இருக்க வேண்டுமானால், நான் சொல்கிறபடி நீ நடந்தாக வேண்டும். முதலில் பாட்டியிடம் மன்னிப்பைக் கேட்க வேண்டும். அடுத்து, நாள்தோறும் பள்ளிப் படிப்பு முடிந்ததும், பாட்டியிடம் வந்து படித்துக்கொள்ள வேண்டும். நீ ஒப்புகிறாயா என்ன?

செல்லம் : அப்படியே செய்கிறேன், பாட்டி! மன்னியுங்கள் பாட்டி! நாள்தோறும் வருகிறோம். எங்களை வாழ்த்துங்கள் பாட்டி!

பாட்டி : அப்படியே செய்யுங்கள். வயது நிறைந்தவர்களைப் போற்றுவது நற்குணங்களில் ஒன்றாகும். நான் இவ்வுலகிற்பட்டு அறிந்த சிலவற்றை உங்களுக்குக் கூற முடியும். வேறென்ன செய்யமுடியும்? நீங்கள் இருவரும் நல்லவைகளை எண்ணி, நல்லவைகளைச் செய்து நல்வழி