பக்கம்:ஐயை.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

மூப்பத் தைந்தாண் டேறிய முதுபெண் இப்பொழு தையைl ஈரொரு தலைமுடி நரைகண் டிருந்த தாயினும் நல்லுடல் புரையிலாக் காத்த இளமையால் பொலிந்தது! மென்மை உணவிருல் மெல்லுடல் தசைபெருத் தன்மையின் இலங்கித் தகைவுற் றிருந்தது! தூய வெள்ளுடை துவள உடுத்திய தாயவள் முகத்தில் இறைமை தவழ்ந்து, காண்பவர் உள்ளக் கசடுகள் நீக்கியும் மாண் பைப் பெருக்கியும் மதிக்கச் செய்தது!

'அம்மா என்றே சேரன் அழைத்திடும் மம்மர் நீக்கும் மருவிலா ஒருசொல், ஐயையின் உள்ளத் தணுவெலாம் நிறைந்து மெய்குளிர் விக்கும் மேன்மையைக் கண்டாள்! பொய்யிலா தவன்பொழி அன்பு,அவள் வாழ்க்கை வெயில்தணி வித்துக் குளிர்நிழல் விரித்தது! அந்நிழல் அடியில் ஐயையும் அமர்ந்து வெந்நிலை தவிர்ந்தாள்; இயற்கையை வியர்தாள்t கல்லூரிக் கல்வி காளைக் கினித்தது; சொல்லுாறி நின்று,அவன் சோர்வைத் தனித்தது! அன்னையின் தாய்மையும் அன்பும் அமைதியும் தன்னை நிறைவுறச் செய்ததால் தந்தையின் அன்பிலாக் குறையை அவளுங் குணர்த்திலன். தென்பவன் உளத்தில் தேங்கி யிருந்தது!

52

35

40

50

55

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/122&oldid=1273583" இலிருந்து மீள்விக்கப்பட்டது