பக்கம்:ஐயை.pdf/129

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பெருஞ்சித்திரனார்

கல்லூரிக் கன்றவனும் செல்ல வில்லை; கடுகிமனை மீண்டுசென்றான் நடுக்கத் தோடே! வல்லூற்றின் கால்சிக்கி விழுந்த குஞ்சாய் வாயடைத்துத் துடிதுடிக்கும் வகையைப் போல நல்லியலாள் பார்வைபட்டே ஒருபால் நொந்தான்; நல்லன்னை நினைத்தொருபால் வருத்த முற்றான்! மெல்லியலாள் மாலையங்கே அவனுக் கென்றே மேற்றிசைவான் இருளுமட்டும் காத்து நின்றாள்! 10

உள்ளத்தில் பெருந்துயரோ டுடல் ந டுக்கோ டுள்வீட்டில் கால்வைத்தான் சேரன்; ஐயை துள்ளியெழுந் தோடிவந்தே தோளத் தொட்டாள்; துணுக்குற்றாள்; உடல்கொதித்த துள்ளம் ைநந்தாள்! கள்ளமிலா அன்புடையாள் "காய்ச்ச லோடு கல்லூரிக் கேன்சென்றாய், தம்பி?" என்றாள்! வெள்ளமெனக் கண்களில்நீர் வடிக்க லுற்றான்! வெந்நீரில் மருந்துதந்து படுக்க வைத்தாள்! | I

59

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/129&oldid=1291250" இலிருந்து மீள்விக்கப்பட்டது