பக்கம்:ஐயை.pdf/144

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

(வேறு)

"நியிங்கே ஒருபிழையும் செய்ய வில்லை,

நினைத்தபிழை யல்லால்! என் கண்ணே, நான்,உன்

தாயிங்கே உரைக்கின்றேன்; மனந்தேற் றிக்கொள்; தந்தையைப்போல் நன்குபடி; பெருமை பெற்று

வா,யிங்கே: நீவிரும்பும் பெண்ணே அக்கால்

வரித்துக்கொள்; இன்றிந்த வஞ்சி தன்னேக்

காயென்று மறந்துவிடு; கனியு னக்குக்

கைக்குவரும்; காத்திருப்பாய்; எழு;செல்!” என்ருள் 5

வில்துவண்டு நின்றதுபோல் எழுந்து நின்ருன்,

விசமகன்; அன்னே முகம் ஒருகால் பார்த்தான்! சொல் துவண் டான் அவையெல்லாம் நகைக்கக் கண்டு சோர்வுற்று நடந்ததுபோல் நடந்து சென்று பல்துலக்கிக் குளித்துடுத்தான், அதற்குள் ஐயை

பண்ணியங்கள் செய்தவன் முன் கொணர்ந்து வைத்தாள்! கல்தவிர்த்துத் தின்பவன்போல் தின்றெ முந்தே

கல்லுரரிக் கன்னேயிடம் சொல்லிச் சென்ருன்! 6

'அத்தையிடம் சொல்லாடித் தணந்து சென்ற

அவன்தந்தை செம்மலைப்போல் இலையென் ருலும்,

மெத்தவுரை கூருமல் இரண்டோர் சொற்கள் .

மேலுக்குப் பேசிவிட்டுச் செல்கின் ருனே!

எத்திரமோ ஆண்கள்திறம்? பருவம் வந்தால்

. இளம்பெண்ணேத் தாயினும்மேல் என்பார் போலும்!

அத்திறத்தான் இவனில்லை, எனினும் நாட்கள் -

ஆகட்டும்; சரியாய்ப்போம்' என்ருள் ஐயை! 7

74

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/144&oldid=1273605" இலிருந்து மீள்விக்கப்பட்டது