பக்கம்:ஐயை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருஞ்சித்திரளுர்

"மென்மையே பெண்மையாம்; தண்மையாம், எல்லேமிகின்

மிகுகேடு சூழும் உலகம்; -இனி வன்மையே ஆண்மையாம்; தெறலுமாம்; அளவு மிகின்

வலிமைசூழ்ந் துயிர்க ளழியும்i-எனின் மென்மைக்கு வன்மையும், வன்மைக்கு மென்மையும்

மிகுதுன; மிகுகாவலாம்!--இத் தன்மையை அறிகிலார் எவராயி னுந்துயர்

தப்பாமல் உறுவர்; அறிக!" 5

'அடக்கமே பெண் மைக் கழகும், உயர்வுமாம்!

அடங்கிலாப் பெண்மை அழியும்!-உயிர்த் தொடக்கமும் முடிவதும் பெண்மையால், இடைவாழ்வு

துலங்குதல் ஆண்தன்மை யால்!-கரை கடக்கக் கருதுதல் பெண் தவிர் பெண்மையும் ஆண் தவிர் ஆண்மையும் காண்!--இடை நடக்கும் இழிவெலாம் நலிவுக்கு வித்துமாம்!

நடுநின்று ஆய்வரறிவார்!" 6

'ஒன்றுமிகின் ஒன்ருகும்; ஒன்றி.ழியின் ஒன்ருகும்!

ஒன்றடுத்த தொன்றின் வாழ் வாம்!--ஒவ் வொன்றும் பெருமையுர உலகம் செழித்துயரும்!

உயர்தாழ்ச்சி யுறலறிவுமாம்!--இவை. அன்றுமே உண்மையாம்; இன்றுமே உண்மையாம்!

அடுத்தென்று மே,உண்மை யாம்!-இதை என்றும் மறவாதே ஒழுக்கம் இறவாதே!

இம்மியும் இழிவுருதே!' . . . . 7

81

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/151&oldid=1273612" இலிருந்து மீள்விக்கப்பட்டது