பக்கம்:ஐயை.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை-2-ஆம் பகுதி

காலையிற் செல்கையில் கலகலப் பின்றியே

காணப்பெற் றிருந்த மகனும்-அன்று மாலையில் உள்ளமும் முகமும் தெளிவடைந்த

மாற்றத்தைக் கண்டு மகிழ்ந்தே-'இன்று சாலையில் அவள்வந்து நிற்கவில் லையென்னும்

சான்றிதாம்" என்று ணர்ந்தாள்- பசும் பா8லயென் வயிற்றினில் வார்த்தனள்' என்றந்தப்

பாவை'யும் வாழ்த்தி உவந்தாள்! s

இரவினில் உணவுண்ணும் வேளையில். மகனிடம்

இரக்கமும் அன்பும் கலந்து-ஒரு கரவிலா உணர்வுடன் "கண்மணி நானுனேக்

காலையில் கடிந்தவற்றுள்-பிழை விரவிட வில்லையென் றெண்ணுவேன்; உண்டெனில்

என்னுரை பொறுத்து, மறப்பாய்1-என இரவுரை கூறவும் இருகை வணங்கியே

இஆல, அம்மாl இல்லை" என்ருன்!

"பிழையிலா, மகனே!கேள்; பெண்பிறவி என்றுமே

பிடுற்ற உயர்ந்த பிறவி!--பெய் மழையிலா நிலம்போல, மணமிலா மலர்போல

மாண்பிலாப் பெண்மை யாகும்!--வெறுந் தழைகுலா வியசெடி மகிழ்விலா தெவர்க்குமே! தாய்மையோ பெண்மை முதிர்ச்சி!-ஆண் விழைவிலா தெதிர்வரும் பெண்மையால் துன்பமே!

வேட்கையும் பெண் மைக் களவே!"

80

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/150&oldid=1273611" இலிருந்து மீள்விக்கப்பட்டது