பக்கம்:ஐயை.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஐயை

துரண்டும் அவனிரு தோள்களில் தோய! 3ύ என் செய் வாளவ் விளங்கொடி துடிப்பாள்! புண்செய் அவன்றன் நினைவையும் புலப்பாள்!

இதற்குள்,

"அம்மே” என்றே அரற்றுமோர் ஆடு! வேலியைத் தாண்டிக் குதித்திடும் ஒன்று! 35 பாலைச் சப்பிடத் தவிக்குமோர் குட்டி! அவற்றிடை ஒடுவாள்! அவை போற் கத்துவாள்! தவழுங் குட்டியைத் தாவி அணேப்பாள்! அவன்றன் நினைவே அண்டும் மீண்டும்! உவகை நெஞ்சத்து ஊஞ்சல் ஆடும்! 40 காதலன் கற்கும் கல்வியைக் கடிவாள்! ஒதற் பிரிவை எண்ணி உ8ளவாள்! அந்திப் பொழுதோ அதற்குள் பாயும்: நொந்து வருந்துவாள்! நோய் மிக உறுவாள்!

காலை யிருந்து மாலை வரையிலும் 45 நூலிடை வருந்த துதல் நனி வெயர்ப்ப - ஆடுகள் மேய்த்தல் ஐயை வழக்கம்! தேடும் அவனேயே விழிகள்: தேய்வாள்! இன்றை வருவான் எனுமவள் நெஞ்சம், அன்றை கடந்தால் அடுத்தநாள் என்னும்! 50 உச்சிப் பொழுதினில் ஊறுகாய்க் காரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:ஐயை.pdf/17&oldid=1273474" இலிருந்து மீள்விக்கப்பட்டது